June 30, 2013

மகளதிகாரங்கள் - 2

These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
  • கலரிங் செய்யும்போது கையோடு சேர்ந்து தலையும் அசையும் என் மகளுக்கு. :-)
  • மானு: அம்மா, ரன்னிங் ரேஸ் விளையாடலாம். நான்: எனக்கு ஓட வராதும்மா. மானு: நீ ஆமை மாதிரி மெள்ள நட, நான் முயல் மாதிரி ஓடுவேன். #Talent2Convince
  • என் நீஸ் சஹானாமகள் மானு ரெண்டுபேருமே chatter பாக்ஸ். என் நீஸ் எதையோ 5 நிமிடமாக சொல்லிக்கொண்டிருக்க, மானு சொல்கிறாள் -என்னை பேசவே விட மாட்டேங்கிறா. :D
  • புது டிரஸ் போட்டுக்கொண்ட மானுவிடம், நெய்பர்: டிரஸ் நல்லா இருக்கு. என்ன விசேஷம்? இவ: எனக்கு வெட்டிங் டே. :-D
  • சாப்பிடல், பல் தேய்த்தல் போன்ற கஷ்டமான விஷயத்தில் ரீசென்ட்டா சேர்ந்தது, மகளை வீட்டுக்கு வர வைத்தல். எந்நேரமும் வெளியே/யார் வீட்டிலாவது.
  • முதல் மரியாதை சிவாஜி மாதிரி, அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு குழந்தையின் குரல் கேட்டாலும் என் மகளுக்கு ஜெர்க் ஆகும். அடுத்த நொடி வெளியே ஓடிடுவா!
  • தன் பொம்மையை அடுத்த குழந்தையிடமிருந்து திரும்பப் பெற என் மகள் சொல்கிறாள் 'உனக்கு கை வலிக்கும். என்கிட்டே குடுத்துடு'.
  • எம் பொண்ணு 'பே ச்கூல்' (play school) ன்னு தெரியாம உண்மைய சொல்றா!
  • நானும், என் மகளும் ஒரே நிறத்தில் உடையணிந்தால் முன்பெல்லாம் 'same pinch' சொல்பவள், இப்போது 'என் friendடப் போல யாரு மச்சான்'னு பாடுகிறாள்
  • "அம்மா, என்ன பாரு, சிரி"ன்னு என் மகள் சொல்லும்போதே தெரிந்து விடுகிறது, அவள் ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்று. :)
  • "மானு, ஏம்மா உனக்கு மிஸ் கைல 'ஸ்டார்' போட மாட்டேங்கறாங்க" என்றால் "என் கைலதான் மருதாணி இருக்கே. ஸ்டார் போட இடமில்ல" என்கிறாள்.
  • மகள் பல் தேய்த்தபின், பேஸ்ட்டை விழுங்குவதற்குள், ஒரு விரலால் அவள் வாயை வழித்து கீழே போட்டால், 'அம்மா pasteடை ஏன் வேஸ்ட் செய்றே'ங்கிறா.
  • சாமி ரூம் குப்பையாக இருக்குது என்றேன். உடனே மகள் அங்கு சென்று 'சாமி, ஏன் குப்பை போட்ட? உன் ரூம சுத்தமா வச்சிக்க தெரியாதா' என்கிறாள்.
  • Spread Cheeseஐ விரலால் எடுத்து மகளுக்கு ஊட்டினேன். அதை சாப்பிட்டு 'அம்மா, cheeseம் நல்லா இருக்கு, உன் விரலும் நல்லா இருக்கு' என்கிறாள். :)
  • 'சஹானா சாரல் தூவுதோ' பாடலை பாடவிடாமல் 'ஜனனி ஜனனி' பாட சொல்கிறாள். காரணம் சஹானா என் niece.
  • 'மானு, பால் ஆறிட்டா நல்லா இருக்காது, குடி'. சிறிது கழித்து 'பால் ஆறிடுச்சு, குடிம்மா'. மானு:ஆறிட்டா நல்லா இருக்காதுன்னுட்டு குடிக்கசொல்றே?
  • என் மகள் 'பாபா ப்ளாக்ஷீப்'பும், 'எபிசிடி'யும் கலந்து கட்டி பாடும்வரை நிஜமாகவே நான் உணரவில்லை இரண்டும் ஒரே மெட்டு என்று.
  • பேப்பர் கப்பல் செய்தால் கூட அம்மா கப்பல், அப்பா கப்பல், பாப்பா கப்பல், பாட்டி கப்பல், தாத்தா கப்பல் செய்ய வேண்டும் மானுவுக்கு. :-)
  • மானுவோட ஃப்ரெண்டு, LKG படிக்கற அந்த கேஷவ் அண்ணாவ பார்த்தே ஆகணும் நான். எல்லா புது பாட்டையும் கத்துகொடுத்துடறான் இவளுக்கு
  • பொரி உருண்டை சாப்பிடக் கொடுத்தால், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'ங்கிறா பொண்ணு. இதெல்லாம் எங்கே கேள்விப்ப்படுறான்னே தெரியல. :-)
  • நான் மானுவை அதட்டும்போதேல்லாம் 'அம்மா, நீ யார் ஃப்ரெண்டு?'. 'உன் ஃப்ரெண்டுதான்.' 'அப்போ ஏன் திட்டுறே?'. கோவம் போய் புன்னகை நிச்சயம். :-)
  • உன் ஃப்ரெண்ட்ஸ் பேர் சொல்லுன்னதும் நிரஞ்சன், கோகுல், சதீஷ்ன்னு சொல்லும்போதே அவர் 'என்னடி ஒரு பொண்ணுபேர் கூட சொல்லமாட்டறா' என்கிறார்
  • பாசமாக விளையாட கூப்பிட்டு, பட்டு பட்டுன்னு (சில சமயம்) அடிக்கறா என் பொண்ணு பக்கத்து வீட்டு குழந்தையை. :-(
  • ஒரு பறவையை பார்த்து கேட்கிறாள் 'அது ஏன் கோபமாக இருக்கிறது' என்று. நான் 'அது angry bird, அப்படித்தான் இருக்கும்'. என்ன புரிந்ததோ பாவம்.
  • குரு பிரம்மா குரு விஷ்ணு ..... சப்பச்சி குருவே நமக - என் மகள் மழலையில்!!
  • அம்மா, யாரு நான் தூங்கும்போது முகத்துல கொசு வெச்சதுன்னு கேக்கறா மானு. பாவம் குழந்தைகள். கொசுக்கள்! டவுன்! டவுன்!
  • அம்மா, cowக்கு இங்கிலிஷ்ல domestic animal ம்மா - என் மகள்!
  • என் பொண்ணு பாடுறா "என் ப்ரெண்ட நிரஞ்சன் போல யாரு மச்சான்". ;-)
  • "மானு, உன்னப் பத்தி த்விட்டர்ல சொல்லிருக்கேம்மா" என்றேன். "ஏம்மா என்ன பத்தி திட்டுற?" என்கிறாள். :)
  • சில்லுன்னு இருக்கேன்னு வீட்டுல செருப்பு போட்டா, விட மாட்டேன்கிறா மகள். வீட்டுல செருப்பு போடக் கூடாதுன்னு நீதானமா சொன்னே என்கிறாள்.
  • என் மகளுக்கு இட்லியைவிட இட்லிப்பொடிதான் பிடிக்குது. இட்லிப் பொடிலையே இட்லி பண்ணிக் கொடுத்துட்டா என்னன்னு யோசிக்கறேன். #TerrorMom
  • மானுவின் பாஷையில் சறுக்கு மரத்திற்கு டொய்ங், ஊஞ்சலுக்கு ஜொய்ங். :)
  • நான்: பாரதியார் பாடின பாட்டு எது? மானு: ஓடி ஓடி விளையாடு (2). // குழந்தைதானே, அதான் confuse ஆயிட்டா. :))
  • 'அம்மா, ஆன்ட்டி மூணுவாட்டி பிஸ்கட் சாப்பிடுன்னு சொன்னானாக, சாப்பிட்டுமா?' என்கிறாள் மானு அந்த ஆன்ட்டிக்கு முன்னாலேயே. :)
  • மானுவின் சமவயது குழந்தைகள் எவரும் 'இரண்டாமிடம்' என்பதை ஒப்புக்கொள்வதில்லை. எனவே நான் சொல்றது-நீயும் ஃபஸ்ட், அவளும் ஃபஸ்ட், அவனும் ஃபஸ்ட்.
  • மானுவின் தோழி 'எனக்கு அந்த பொம்மை கொடுக்கலைன்னா நான் விளையாட வர மாட்டேன்'. உடனே மானு 'சரி, இந்தா'. #WhatATechnic
  • நானும் என் மகளைப் போல் முதுக்கு (முறுக்கு) என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டேங்கிறாள். சரியா முதுக்குன்னு சொல்லும்மா என்கிறாள் :-)
  • காலி பாத்திரம் ஒரு அக்ஷயப் பாத்திரம். இல்லாத மம்மு அதிலிருந்து வந்துக் கொண்டே இருக்கும் என் மகளுக்கு. :)
  • 'அம்மா, எங்க டீச்சரும் குப்பைக்கார அங்கிள் மாதிரியே விசில் வெச்சிருக்காங்க' என்கிறாள் மகள்.
  • ரோட்டில் வரும் சோன்பப்படிக்காரனின் பெல்லின் சத்தம் மகளுக்கு கேக்காதவாறு அவளை வேறெதிலாவது engage செய்வது எங்கள் வீட்டில் நல்ல காமெடி.
  • எம் பொண்ணு ஒருமுறை என்னிடம் 'அம்மா, எனக்கு 5 அம்மா வேணும்'னா. நான் நெனச்சேன் 'நல்ல வேளை, அவ அப்பா இதை கேக்கல'ன்னு.
  • என் மகள் 'ஒருவர் தனக்கு ரொம்ப பிடிக்கும்' என்பதை விரல் விட்டு எண்ணி 5, 10 இவ்வளவு பிடிக்கும் என 'வித்யாசமாய்' சொல்வாள்.#போன கீச்சின் key
  • மாதுளம்பழ ஒரு முத்தைக்கூட மூன்று முறை கடித்து சாப்பிட என் மகளால் மட்டும்தான் முடியும்.
  • மூணரை வயதில் மொபைலில் சிட்டி ப்ளாக்ஸ் விளையாடுகிறாள் மகள். # கலிகாலம்
  • மூக்கி மூக்கி, மூக்கு மூக்கு பியர்ஸ் விளம்பரம் முழுசா நடிச்சி காட்டுரா மானு, அவ கசின் சொல்லிக்கொடுத்து. :-)
  • பார்வதி நல்ல புத்தி வரட்டும்னு பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார்ன்னு நான் சொல்ல 'அப்போ அவருக்கு புத்தி இருக்கலையா' என்கிறாள் மகள். அவ்வ்
  • ரொம்ப சீரியஸா மானு சொல்லுவா 'அம்மா, ப்ளிஸ், எனக்கு சாப்பிடாம இருக்கணும்போல ஆசையா இருக்கும்மா'.
  • 'மானு, ஸ்வீட் சாப்பிடலாமா?'. 'வேணாம்மா, உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்'. #அவ்வ்
  • தமிழையும், தாய் மொழியையும் கலந்து, ஏற்கனவே உள்ள மழழையில் குழைத்து பேசும் என் மானுவின் மொழி மிக அழகு.
  • சமான் லிஸ்ட் எழுத நோட்டும், பேனாவும் எடுத்தா, என் மகள் 'ஏனம்மா சொல்லிக் கொடுக்கப் போறே?' என்கிறாள். ரொம்ப படுத்தறேனோ அவளை? அவ்வ்.
  • புது பேனா வாங்கினா நம்ம பேர் எழுதி பார்க்கிறமாதிரிதான் புது மொபைல் வாங்கினதும் நம்ம குழந்தைய போட்டோ எடுக்கறது.
  • பலூன் ஊதுவதை பார்க்கும்போது பயந்து காது மூடிக்கொள்வாள். அது உடைந்தாலும் பயம், அழுவாள். ஆனால் ஊதிய பலூன்னா ரொம்ப பிடிக்கும். #மகள்
  • என் மகள் அவளின் சகவயது தோழிகளை வா/போ என்றும், தோழர்களை டா சொல்லியும்தான் அழைக்கிறாள். #பெண்குழந்தையாதிக்கம்
  • இரண்டு கைகளாலும் என் தலைமுடியை படிய வாரி, இருக்கும் பொட்டையே இன்னும் சரியாக வைத்து - என்னுடைய பியூட்டிஷியன் என் மகள்.#Bliss
  • வீட்டை பெயிண்ட் அடிக்கலாம்னு நினைக்கும்போது, சுவற்றில் எல்லாம் ஸ்கெட்ச் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறாள் மகள்.
  • நான்:சின்ன வயசுல நான் சாக்லேட் கேட்டா, பல்லு போய்டும்னு பாட்டி சொல்வாங்க.நானும் சரின்னுடுவேன். மானு:அப்போ ஐஸ் கேட்க வேண்டியதுதானேம்மா?
  • உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா, என் மக வித்தியாசமா ஒண்ணு ரெண்டுன்னு விரல்களை எண்ணி ஃபைவ்/சிக்ஸ் பிடிக்கும்னு சொல்வாள். :-)
  • மகளின் பள்ளியில் ஃபோட்டோ செஷன். நான்:மிஸ் கிட்ட 'எப்போ போட்டோ தருவீங்கன்னு' கேளு. மகள்:இங்கிலீஷ்ல அத எப்படிம்மா சொல்லணும்?#OnlyEnglis.
  • "அம்மா,என்னோட கனவுல பூதம் வந்தா,கண்ணை மூடிகிட்டே உன்னை எழுப்பறேன்.நீ என் கனவுல வந்து அதை அடிச்சிடறீயா" - மகள். ஆஹா!!
  • 'ராவணனுக்கு பத்து தலைன்னா, ஒண்ணு ரியல், மத்தது மாஸ்க் தானேம்மா' என்கிறாள் மகள். :-))
  • "கையில தடவுன ஓடோமாஸ, கொசு சாப்பிட்டு, என் கையிலயே வாமிட் பண்ணிடுச்சுன்னா? உவ்வேக்" என்கிறாள் மகள். :-))
  • குல்லா போட்டுக்கோன்னு நெய்பர் சொன்னதும், 'அது குல்லா இல்ல, காஃப்' என்கிறாள் மகள் #ஸ்கார்ஃப்
  • பாட்டு பாடும்மான்னா சுமாரா பாடுவா. பாட்டு மாதிரி பாடுன்னா நல்லா ராகமா பாடுவா #மகள் ;-))
  • 'ஜானு, ஸ்வீட் பொட்டேட்டோ சாப்பிடும்மா'. டேஸ்ட் பார்த்துட்டு 'பொட்டேட்டோவை ஏம்மா ஸ்வீட்டா செஞ்சிருக்கே, எப்போதும்போல காரமா செய்'ங்றா. :-)
  • ஃபோன் பேசிட்டு வெக்கும்போது ஏம்மா பை சொல்றே? அவங்க வெளிய போகப் போறாங்களா? வெச்சிடறேன்னு சொல்லு #மகள் #அதானே :-)
  • வீட்டு சுவற்றில் இருக்கும் air crackஐப் பார்த்து, 'நம்ம வீட்டுக்கு நரசிம்மர் வந்துட்டு போய்ட்டாரா?' என்கிறாள் மகள்.
  • நேற்று டிவியில் ஹிரண்யகசிபு கடவுளைப் பார்த்து ரெண்டுகையும் மேலே நீட்டி பெரிய்ய வரத்தை கேட்கிறான். என் மகள் 'சாமிய தூக்கிகோன்னு சொல்றாராம்மா'ன்னு கேக்கறா. 
  • பொறுமையாக மகளுக்கு 'புரிஞ்சுக்கோம்மா, எனக்கு வேலை இருக்கு, நீயே விளையாடிக்கோ'ன்னா, சீரியஸ்சாக 'புரியுதும்மா, இப்போ என்னோட விளையாடு'. ;-)
  • நாம் சிறிது முகம் வாடி இருந்தாலும், நம் கன்னத்தை தன் பிஞ்சுக் கைகளில் தாங்கி என்னம்மா ஆச்சுன்னு வாஞ்சையுடன் விசாரிக்கும் மழலைகள் வரம். :-)
  • 'எனக்கு தலை வலிக்குது, படுத்தாம சாப்டுர்ரியா' என்றால், வாய்ப்பை தவற விடாமல் 'ம்ம்ம், இன்னிக்கு எனக்கு சாப்பாடு வேணாம், நீ ரெஸ்ட் எடு'ங்றா.

மகளதிகாரங்கள் - 1



      These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
      • 'அப்பா, நானே உனக்கு வொய்ப்பா (wife) இருக்கிறேன். அம்மா, வேணாம்பா' என்கிறாள் மானு. :) #Pocessive
      • 'அம்மா, அது கருப்பு cow தான், buffalo கிடையாது. எனக்கு தப்பு தப்பா சொல்லித் தராதே' - என் மகள். :)
      • மானு ரொம்ப அமைதியானவள் - தூங்கும்போது. ;)
      • மானு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, தான் நகங்களை பார்த்தபடி எல்லோருக்கும் உள்ளங்கையை காட்டுகிறாள். #மழலை
      • குழந்தை வளர்ப்பில் தலைசிறந்தவர் யாரவது இருக்கிறார்களா - மானுவை சிறந்த முறையில் வளர்க்க டிப்ஸ் தேவை எனக்கும், என் அம்மாவுக்கும். #புரிந்ததா?
      • வெறும் கையை கொடுத்து சாக்லேட் சாப்பிடு என்றாள் மகள். சரின்னு சாபிட்டா, 'அச்சோ, பேப்பர் பிரிக்காமே சாப்பிட்றியே' என்கிறாள். #இன்றைய பல்பு
      • நான் airplane வரைந்து, என் மகளிடம் இது என்ன என்றால் fish என்கிறாள். #இன்றைய பல்பு
      • 'மானு, சாபிடலன்னா பூச்சாண்டி வந்துடும். ஒழுங்கா சாப்புடு.' - நான். 'அம்மா, நா சாபிடல, பூச்சாண்டிய காட்றியா ப்ளிஸ்' - மானு #பல்பு
      • 'திரும்ப திரும்ப விளையாடுற நீ (2)' என்று மானுவை பார்த்துதான் சொல்லவேண்டும். விளையாடினதையே மறுபடி (2) விளையாடச்சொல்லி...#முடியலே :)
      • வெச்சா குடுமி கதைதான் மானுவிடம். ஒன்று தண்ணியே குடிக்கமாட்டாள், அல்லது அரை பாட்டில் குடிப்பாள் அதுவும் சரியாக சாப்பாட்டிற்கு முன் :)
      • எதிர் வீட்டில் இருப்பவர் டீச்சர் என்றால் மானு நம்பமாட்டாள். போம்மா, அவங்க ஆண்ட்டிதான் என்பாள். அவரே இதை கேட்டு சிரிப்பார். :)
      • குழந்தையின் எந்த வேலையிலும் தலையிடாத அவரைப்பார்த்து மானு கேட்கிறாள் "அப்பா, உனக்கு fridge தொறக்க வருமாப்பா" :)
      • இன்று மானு சொன்னது - அம்மா, எனக்கு கருப்பு பூனை பிடிக்காதும்மா, வெள்ளை பூனைதான் பிடிக்கும். :( # பிஞ்சுக்குள் நஞ்சு
      • என் மாமியார் 'நான் வீட்டுக்கு வரட்டுமா' என்று மானுவிடம் ஃபோனில் கேட்டார். அவள் என்னை பார்த்து 'பாட்டி நம்ம வீட்டுக்கு வரட்டுமாம்மா' கேட்கிறாள். #அவ்வ்
      • என் இறந்து போன தந்தைக்கு என் மகள் விளையாட்டுக்கு போன் செய்து, 'ஏன் தாத்தா அம்மாவை விட்டுட்டு போயிட்டே? அம்மா பாவம் இல்லையா' என்கிறாள்
      • 'அம்மா, நான் நல்லா சாப்பிடுவேன். அப்போதான் பலசாலி ஆக முடியும்' - மானு. // பேசும்போது நல்லா வக்கணையா பேசு. எழும்போது கோட்ட விட்டுடு.
      • மானுதான் உண்மையான கீச்சர். மெதுவா பேசணும்னு எவ்ளோ சொன்னாலும் கீச்சு கீசுன்னு கத்தி கத்தி பேசுறா. :)
      • என் மகளுக்கு என்ன கதை சொன்னாலும், அவள் கண்கள் விரித்து கேட்கும் விதமே தெரிகிறது, அதை மனதில் காட்சிகளாக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று
      • Straight line என்று வரைந்து காட்டினால், ’அம்மா, lion இப்படி இருக்காது’ என்று தன் கதை புக்கிலிருந்து சிங்கம் காட்டுகிறாள் என் மகள்.
      • நான் இனிமே எதிர்வீட்டு குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். அப்போதான் எம்பொண்ணு அதுகூட விளையாடுவா. :D
      • பல்தேச்சி பல்தேச்சி காபி குடி'ன்னு பாடுறா என்பொண்ணு #பர்தேசி பர்தேசி ஜானா நஹின்.
      • மானுவின் அத்தை விஜிக்கு இன்னொரு பேர் விஜயஸ்ரீ என்றேன். இன்னொரு நாள் அனுமாருக்கு வேற பேர் என்னன்னு கேட்டதுக்கு, மகள் அனுமஸ்ரீ என்கிறாள். #PresenceOfMind
      • எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் இரு கோலங்கள். ஒன்று கொஞ்சம் தெளிவாக, இன்னொன்று ரொம்ப அழகாக (என் மகள் போடுவது).
      • மகள் திறக்கக்கூடதுன்னு வாஷ் பேசின் குழாயை கீழே மூடிவிட்டு, ஏதோ நினைவில் மேல் குழாயை திருகினால், அவ சொல்றா - அம்மா, கீழே மூடிருக்கும்மா.
      • குழாய் வாமிட் பண்ணுது, அந்த தண்ணிய ஏம்மா எம்மேல ஊத்தரே என்கிறாள் மகள் அவளை குளிப்பாட்டுகையில். :)
      • எங்க கல்யாண நாளின் போது எவ்வளவு முறை நான் 'எனக்கும் அப்பாவுக்கும் கல்யாண நாள்'ன்னு சொன்னாலும், ஒவ்வொரு முறையும் 'அப்படி இல்லைம்மா, எனக்கு, உனக்கு, அப்பாவுக்கு கல்யாண நாள்ன்னு சொல்லு'ன்னு சொல்லிட்டே இருந்தாள் ;-) #Pocessive
      • சாப்பிடாமல் படுத்திய சமயத்தில், மகளுக்கு புரியாத கன்னடத்தில் அவரிடம், 'நீ சாப்பிட்டு முடிச்சாதான் பேசுவேன்'ன்னு சொல்லுங்கன்னேன். ஆனா அவர் சொல்லலை. ஓரிரு நொடிகள் கழித்து இவள் 'அம்மா, அப்பா ஒண்ணுமே என்கிட்டே சொல்லலேம்மா'ங்கிறா. #வேறெந்த மொழியில பேசணும்னு தெரியல எங்களுக்கு.
      • என் பொண்ணுக்கு ஹாப்பி வாலன்டைன் டேன்னு சொன்னா, ஹாப்பி பர்த் டேன்னு சொல்லும்மா. எனக்கு அதுதான் பிடிக்கும்ங்கறா.
      • பள்ளியில் சொல்லிக்கொடுத்த மெடிட்டேஷனை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாள். நன்றாக கண்ணைமூடினால், 'அப்படி இல்லைம்மா, லைட்டா ஒரு கண்ணை திறந்து பார்க்கலாம், நாங்கெல்லாம் அப்படிதான் செய்வோம்'ங்கிறா. அவ்வ்
      • என் சாதாரண ஜுரத்திற்கும் உடனே டாக்டரைப் பார்க்க வைக்கிறாள் மகள். இல்லாத என் அப்பாக்கு போன் செய்து 'தாத்தா, உங்க பொண்ண கூட்டிட்டு போங்க'.
      • சுழல் நாற்காலியில் விளையாடும் மகளிடம் ஒரு வாய் சாப்டுட்டு சுத்துன்னு சொன்னா, 'இரும்மா, கணேஷா மாதிரி மூணுதடவ சுத்திட்டு அப்புறம்'ங்கிறா.
      • 'டேபுள் மேல ஏறி விழுந்து மண்டைய ஒடெச்சுக்காதடி' ன்னு மகளுக்கு சொன்னா, அவ 'அப்ப, கணேஷா மாதிரி எலிஃபண்ட் தலைய எனக்கு வெச்சிடு' என்கிறாள்.
      • எங்கள் நெய்பர்'ருக்கும், என் அண்ணனுக்கும் ஒரே பேர் என்பதால், என் மகள் பிரசாத் அங்கிள், பிரசாத் மாமான்னு தெளிவா கூப்பிடுறா.

      • மானுவுக்கு எதையாவது சாப்பிடக் கொடுத்து எப்படி இருக்குன்னு கேட்டா 'பிடிக்கல'ன்னு சொல்லாம, 'நல்லா இருக்கு, எனக்கு போதும்'ன்னு சொல்லுவா.
      • மானுவின் பொருளை யாராவது கேட்டால், 'கொடுக்க மாட்டேன்'னு சொல்லாமல் 'புதுசு வாங்கித்தரேன்' என்பாள். :D
      • அபார்ட்மெண்ட்டில் ஒரு புதிய சிறுமி என் மகளின் பெயரை கேட்டாள். மானு பதில் சொன்னாள். அச்சிறுமி சொன்னது 'அப்ப நீ கேர்ல்லா?' #சம்மர்-கட்
      • நான் 'சின்ன வயசில் எங்க டீச்சர் பெரிய கொம்பால அடிப்பாங்க'ன்னு என் பொண்ணுகிட்ட சொன்னா, எங்க மிஸ்ஸு ஸ்கேல்லாலதாம்பா அடிப்பாங்கங்கிறா. அவ்வ்
      • ஒரு van'ன் பின்பக்கம் எரியும் சிகப்பு விளக்குகளை பார்த்து என் மகள் கேட்கிறாள் 'ஏம்மா அந்த van கோவமா பார்க்குது?' எப்படி தோணுதோ அவளுக்கு?
      • சடி, பரியது, சருப்பு - ஒற்றைக் கொம்பு வார்த்தைகள் உச்சரிக்க வராத என் மகளுடைய மழலை வார்த்தைகள். :-)
      • நான் டீச்சராக இருந்தால், 'மிஸ், சாய் பிஞ்சிங் / கீதா பீட்டிங்'ன்னு என்னை பாடம் எடுக்க விடாமல் யார் மீதோ புகார் கொடுத்துக் கொண்டே இருப்பாள்
      • டீச்சர் விளையாட்டில் என் மகள் ஸ்ட்ரிக்ட் டீச்சர் ஆகி, என்னை மக்கு பிள்ளை ஆக்கிவிடுகிறாள். :)
      • ம்ம், ம்ஹூம், தலையாட்டுதல் போன்றவற்றை communicationனாகவே எடுத்துக்க மாட்டா என் பொண்ணு. எம்மா ம்ம் சொல்ற, என்கிட்டே பேசமாட்டியா என்பாள்.
      • எந்த கதையை சொன்னாலும் மகள் 'அங்கே அழைச்சிட்டு போம்மா'. அது வெறும் ஸ்டோரி'மா என்றால் அந்த ஸ்டோரிக்குதான் அழைச்சிட்டுப் போ என்கிறாள். கதை சொல்லலாம், கதைன்னா என்னன்னு எப்படி சொல்றது.

      December 31, 2012

      எனது குட்டி(க்கு) விருதுகள்


      இது விருதுகளுக்கான சீசன். நான் வித்யாசமாக prepare செய்ய ஆரம்பித்தால், ஓரளவு விருதுகள் தேறியது. இவை அனைத்தும் நான் என் மகளுக்கு கொடுக்கும் விருதுகள். 


      1. ஆள் மயக்கி விருது - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, புதிதாக சந்தித்தாலும் எப்படியோ அனைவரையும் attractட்டி விடுவாள்.  

      2. சிறந்த கதை சொல்லி விருது - வெறும் பறவைகள்/ மிருகங்கள் உள்ள புத்தகத்தை வைத்தே கதையை இட்டுக் கட்டி சொல்லிவிடுவாள்.

      3. 'தல' விருது - நான் 'தல' ரசிகைன்னா, என் மக 'walk' ரசிகை. எப்போதும் நடந்துகொண்டே இருப்பாள்.

      4. இருட்டு கடை அல்வா விருது - இரவு 11 மணி ஆனாலும் விளக்கெல்லாம் அனைத்து விட்டிருந்தாலும் ஏதோ விளையாடிக் கொண்டே இருப்பாள்.

      5. எது உன்னுதோ அது என்னுது, எது என்னுதொ அதுவும் என்னுது விருது - இந்த விருது 'Self explanatory'.

      6. என் friendட போல யாரு மச்சான் விருது - ஒருநாள் நானும் அவளும் ஒரே கலரில் உடை உடுத்தி இருந்ததால், அவ பாடின பாட்டு. அடுத்த நாளே பள்ளியிலிருந்து வந்தவுடன், அதை கொஞ்சம் மாற்றி 'என் friend நிரஞ்சன் போல யாரு மச்சான்'ன்னு பாடினாளே பார்க்கணும்.

      7. Baby Engineer - மொபைல், ரிமோட் எதுவா இருந்தாலும் பேட்டரியை கழட்டி, மறுபடி பொருத்தத் தெரியும்.  

      8. Talent Inducer - எனக்குள் இருந்த சமையல் திறமையை வெளிக்கொர்ந்தவள். அவ்வ்   

      9. Home Food Eater (?!) - ஹோட்டலுக்கு போனால் நாங்கள் நன்கு சாப்பிட, அவ வெறும் அந்த சாலட்ல இருக்குற வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு, டம்ப்ளர் நிறைய தண்ணி குடித்து, வீட்டுக்கு வந்தபின் youtube பார்த்துக் கொண்டே இட்லியை சாப்பிடுவதால்.      

      10. Baby. Complaint - சதா எதை/யாரைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டே இருப்பதால்.  

      11. Best Adviser - மற்ற குழந்தைகளுக்கு அட்வைஸ் மழை பொழிவதால். (துப்ப கூடாது, ஒழுங்கா சாப்பிடனும்; குட் கேர்ள்ளா இருக்கணும் etc.)  

      12. Best Entertainer - அடுத்தாத்து அம்புஜத்தை பாட்டை முழுதாக, ஓரளவு ஆக்க்ஷனுடன் பாடுவாள். Youtube புண்ணியத்தில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலா ரெண்டு ரைம்ஸ்சாவது சொல்லுவா.    

      13. Best Nose-Cutter - அவளுடன் பழகும் எல்லாருக்கும், ஒரு மூக்குடைப்பாவது உறுதி. ஒருமுறை நான் ஏரோப்ளேன் வரைந்தால், அதை மீன் என்று சொன்னாள்.

      14. Selective Appetite - முறுக்கு, சிப்ஸ் தவிர மற்ற எல்லாமே, அவ மூட் பொறுத்துதான். அல்லது அவ சாப்பிடுவது அந்நாளில் என் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. பெரும்பாலும் எனக்கு துர்-அதிர்ஷ்டம் தான்.        

      15. பேசும்போது நல்லா வக்கணையா பேசு விருது - 'அம்மா, நல்லா சாப்பிட்டாதான் பலசாலியா இருக்கலாம். நான் இனிமே நல்லா சாப்பிடுவேன்மா'ன்னு சொல்லிட்டு, செயல்ன்னு வரும்போது என் பொறுமையை சோதிப்பாள்.  

      16. Baby Slim Beauty - மேல் சொன்ன காரணங்களுக்காக அவ மிக ஒல்லியா இருப்பா. எனவே இந்த விருது. 

      17. Terror Teacher - டார்க் ரூம்ல போட்டுடுவேன், அம்மாகிட்ட அனுப்ப மாட்டேன்ன்னு ஒரு டசன் பயங்களைக் காட்டுவாள் அவள் டீச்சர்ராக இருக்கும் விளையாட்டில்.    

      18. Take It Easy - எங்க விழுந்து எங்க அடிப்பட்டாலும், சாதரணமா எழுந்து போயிட்டே இருப்பா. இல்லன்னா 2 mins நூடுல்ஸ் மாதிரி அழுகை.  

      19. Best Accommodative Baby - எனக்கு உடம்பு முடியாதபோது, ஒரு வாரம் என்னை விட்டு அவ அத்தையிடம் சமர்த்தாக இருந்ததால். 

      20. Tongue Twister - beach-jeap, kitchen-chicken இவற்றை சரியாக மாற்றி உபயோகிப்பா ஒவ்வொரு முறையும்.  

      21. ஜென் Award - அவள் பிறந்த நாளுக்காக 5,6 உடைகளை அவளுக்கு  கொடுத்தபோது 'என் கிட்டதான் நிறைய ட்ரெஸ் இருக்கேம்மா, எதுக்கு இவ்ளோ வாங்கின' ன்னு சொன்னதற்காக. 

      22. செல்லம் - மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் செல்லம் அவள்.

      என்ன, உங்களுக்கும் அவளை பிடித்து போயிற்றுதானே!