These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
- 'அப்பா, நானே உனக்கு வொய்ப்பா (wife) இருக்கிறேன். அம்மா, வேணாம்பா' என்கிறாள் மானு. :) #Pocessive
- 'அம்மா, அது கருப்பு cow தான், buffalo கிடையாது. எனக்கு தப்பு தப்பா சொல்லித் தராதே' - என் மகள். :)
- மானு ரொம்ப அமைதியானவள் - தூங்கும்போது. ;)
- மானு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, தான் நகங்களை பார்த்தபடி எல்லோருக்கும் உள்ளங்கையை காட்டுகிறாள். #மழலை
- குழந்தை வளர்ப்பில் தலைசிறந்தவர் யாரவது இருக்கிறார்களா - மானுவை சிறந்த முறையில் வளர்க்க டிப்ஸ் தேவை எனக்கும், என் அம்மாவுக்கும். #புரிந்ததா?
- வெறும் கையை கொடுத்து சாக்லேட் சாப்பிடு என்றாள் மகள். சரின்னு சாபிட்டா, 'அச்சோ, பேப்பர் பிரிக்காமே சாப்பிட்றியே' என்கிறாள். #இன்றைய பல்பு
- நான் airplane வரைந்து, என் மகளிடம் இது என்ன என்றால் fish என்கிறாள். #இன்றைய பல்பு
- 'மானு, சாபிடலன்னா பூச்சாண்டி வந்துடும். ஒழுங்கா சாப்புடு.' - நான். 'அம்மா, நா சாபிடல, பூச்சாண்டிய காட்றியா ப்ளிஸ்' - மானு #பல்பு
- 'திரும்ப திரும்ப விளையாடுற நீ (2)' என்று மானுவை பார்த்துதான் சொல்லவேண்டும். விளையாடினதையே மறுபடி (2) விளையாடச்சொல்லி...#முடியலே :)
- வெச்சா குடுமி கதைதான் மானுவிடம். ஒன்று தண்ணியே குடிக்கமாட்டாள், அல்லது அரை பாட்டில் குடிப்பாள் அதுவும் சரியாக சாப்பாட்டிற்கு முன் :)
- எதிர் வீட்டில் இருப்பவர் டீச்சர் என்றால் மானு நம்பமாட்டாள். போம்மா, அவங்க ஆண்ட்டிதான் என்பாள். அவரே இதை கேட்டு சிரிப்பார். :)
- குழந்தையின் எந்த வேலையிலும் தலையிடாத அவரைப்பார்த்து மானு கேட்கிறாள் "அப்பா, உனக்கு fridge தொறக்க வருமாப்பா" :)
- இன்று மானு சொன்னது - அம்மா, எனக்கு கருப்பு பூனை பிடிக்காதும்மா, வெள்ளை பூனைதான் பிடிக்கும். :( # பிஞ்சுக்குள் நஞ்சு
- என் மாமியார் 'நான் வீட்டுக்கு வரட்டுமா' என்று மானுவிடம் ஃபோனில் கேட்டார். அவள் என்னை பார்த்து 'பாட்டி நம்ம வீட்டுக்கு வரட்டுமாம்மா' கேட்கிறாள். #அவ்வ்
- என் இறந்து போன தந்தைக்கு என் மகள் விளையாட்டுக்கு போன் செய்து, 'ஏன் தாத்தா அம்மாவை விட்டுட்டு போயிட்டே? அம்மா பாவம் இல்லையா' என்கிறாள்
- 'அம்மா, நான் நல்லா சாப்பிடுவேன். அப்போதான் பலசாலி ஆக முடியும்' - மானு. // பேசும்போது நல்லா வக்கணையா பேசு. எழும்போது கோட்ட விட்டுடு.
- மானுதான் உண்மையான கீச்சர். மெதுவா பேசணும்னு எவ்ளோ சொன்னாலும் கீச்சு கீசுன்னு கத்தி கத்தி பேசுறா. :)
- என் மகளுக்கு என்ன கதை சொன்னாலும், அவள் கண்கள் விரித்து கேட்கும் விதமே தெரிகிறது, அதை மனதில் காட்சிகளாக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று
- Straight line என்று வரைந்து காட்டினால், ’அம்மா, lion இப்படி இருக்காது’ என்று தன் கதை புக்கிலிருந்து சிங்கம் காட்டுகிறாள் என் மகள்.
- நான் இனிமே எதிர்வீட்டு குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன். அப்போதான் எம்பொண்ணு அதுகூட விளையாடுவா. :D
- பல்தேச்சி பல்தேச்சி காபி குடி'ன்னு பாடுறா என்பொண்ணு #பர்தேசி பர்தேசி ஜானா நஹின்.
- மானுவின் அத்தை விஜிக்கு இன்னொரு பேர் விஜயஸ்ரீ என்றேன். இன்னொரு நாள் அனுமாருக்கு வேற பேர் என்னன்னு கேட்டதுக்கு, மகள் அனுமஸ்ரீ என்கிறாள். #PresenceOfMind
- எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் இரு கோலங்கள். ஒன்று கொஞ்சம் தெளிவாக, இன்னொன்று ரொம்ப அழகாக (என் மகள் போடுவது).
- மகள் திறக்கக்கூடதுன்னு வாஷ் பேசின் குழாயை கீழே மூடிவிட்டு, ஏதோ நினைவில் மேல் குழாயை திருகினால், அவ சொல்றா - அம்மா, கீழே மூடிருக்கும்மா.
- குழாய் வாமிட் பண்ணுது, அந்த தண்ணிய ஏம்மா எம்மேல ஊத்தரே என்கிறாள் மகள் அவளை குளிப்பாட்டுகையில். :)
- எங்க கல்யாண நாளின் போது எவ்வளவு முறை நான் 'எனக்கும் அப்பாவுக்கும் கல்யாண நாள்'ன்னு சொன்னாலும், ஒவ்வொரு முறையும் 'அப்படி இல்லைம்மா, எனக்கு, உனக்கு, அப்பாவுக்கு கல்யாண நாள்ன்னு சொல்லு'ன்னு சொல்லிட்டே இருந்தாள் ;-) #Pocessive
- சாப்பிடாமல் படுத்திய சமயத்தில், மகளுக்கு புரியாத கன்னடத்தில் அவரிடம், 'நீ சாப்பிட்டு முடிச்சாதான் பேசுவேன்'ன்னு சொல்லுங்கன்னேன். ஆனா அவர் சொல்லலை. ஓரிரு நொடிகள் கழித்து இவள் 'அம்மா, அப்பா ஒண்ணுமே என்கிட்டே சொல்லலேம்மா'ங்கிறா. #வேறெந்த மொழியில பேசணும்னு தெரியல எங்களுக்கு.
- என் பொண்ணுக்கு ஹாப்பி வாலன்டைன் டேன்னு சொன்னா, ஹாப்பி பர்த் டேன்னு சொல்லும்மா. எனக்கு அதுதான் பிடிக்கும்ங்கறா.
- பள்ளியில் சொல்லிக்கொடுத்த மெடிட்டேஷனை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாள். நன்றாக கண்ணைமூடினால், 'அப்படி இல்லைம்மா, லைட்டா ஒரு கண்ணை திறந்து பார்க்கலாம், நாங்கெல்லாம் அப்படிதான் செய்வோம்'ங்கிறா. அவ்வ்
- என் சாதாரண ஜுரத்திற்கும் உடனே டாக்டரைப் பார்க்க வைக்கிறாள் மகள். இல்லாத என் அப்பாக்கு போன் செய்து 'தாத்தா, உங்க பொண்ண கூட்டிட்டு போங்க'.
- சுழல் நாற்காலியில் விளையாடும் மகளிடம் ஒரு வாய் சாப்டுட்டு சுத்துன்னு சொன்னா, 'இரும்மா, கணேஷா மாதிரி மூணுதடவ சுத்திட்டு அப்புறம்'ங்கிறா.
- 'டேபுள் மேல ஏறி விழுந்து மண்டைய ஒடெச்சுக்காதடி' ன்னு மகளுக்கு சொன்னா, அவ 'அப்ப, கணேஷா மாதிரி எலிஃபண்ட் தலைய எனக்கு வெச்சிடு' என்கிறாள்.
- எங்கள் நெய்பர்'ருக்கும், என் அண்ணனுக்கும் ஒரே பேர் என்பதால், என் மகள் பிரசாத் அங்கிள், பிரசாத் மாமான்னு தெளிவா கூப்பிடுறா.
- மானுவுக்கு எதையாவது சாப்பிடக் கொடுத்து எப்படி இருக்குன்னு கேட்டா 'பிடிக்கல'ன்னு சொல்லாம, 'நல்லா இருக்கு, எனக்கு போதும்'ன்னு சொல்லுவா.
- மானுவின் பொருளை யாராவது கேட்டால், 'கொடுக்க மாட்டேன்'னு சொல்லாமல் 'புதுசு வாங்கித்தரேன்' என்பாள். :D
- அபார்ட்மெண்ட்டில் ஒரு புதிய சிறுமி என் மகளின் பெயரை கேட்டாள். மானு பதில் சொன்னாள். அச்சிறுமி சொன்னது 'அப்ப நீ கேர்ல்லா?' #சம்மர்-கட்
- நான் 'சின்ன வயசில் எங்க டீச்சர் பெரிய கொம்பால அடிப்பாங்க'ன்னு என் பொண்ணுகிட்ட சொன்னா, எங்க மிஸ்ஸு ஸ்கேல்லாலதாம்பா அடிப்பாங்கங்கிறா. அவ்வ்
- ஒரு van'ன் பின்பக்கம் எரியும் சிகப்பு விளக்குகளை பார்த்து என் மகள் கேட்கிறாள் 'ஏம்மா அந்த van கோவமா பார்க்குது?' எப்படி தோணுதோ அவளுக்கு?
- சடி, பரியது, சருப்பு - ஒற்றைக் கொம்பு வார்த்தைகள் உச்சரிக்க வராத என் மகளுடைய மழலை வார்த்தைகள். :-)
- நான் டீச்சராக இருந்தால், 'மிஸ், சாய் பிஞ்சிங் / கீதா பீட்டிங்'ன்னு என்னை பாடம் எடுக்க விடாமல் யார் மீதோ புகார் கொடுத்துக் கொண்டே இருப்பாள்
- டீச்சர் விளையாட்டில் என் மகள் ஸ்ட்ரிக்ட் டீச்சர் ஆகி, என்னை மக்கு பிள்ளை ஆக்கிவிடுகிறாள். :)
- ம்ம், ம்ஹூம், தலையாட்டுதல் போன்றவற்றை communicationனாகவே எடுத்துக்க மாட்டா என் பொண்ணு. எம்மா ம்ம் சொல்ற, என்கிட்டே பேசமாட்டியா என்பாள்.
- எந்த கதையை சொன்னாலும் மகள் 'அங்கே அழைச்சிட்டு போம்மா'. அது வெறும் ஸ்டோரி'மா என்றால் அந்த ஸ்டோரிக்குதான் அழைச்சிட்டுப் போ என்கிறாள். கதை சொல்லலாம், கதைன்னா என்னன்னு எப்படி சொல்றது.
No comments:
Post a Comment