Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts
September 14, 2012
ட்விட்டர் பற்றிய கீச்சுக்கள்
• DP, அதிலிருக்கும் போஸ் இவை அவரவர் கீச்சும் கீசுகளுக்கு ஒத்து போவதை உணர்கிறேன்.
• நல்ல வேளை, ட்விட்டர் ஒலி வடிவத்தில் இல்லை. ஒரு 10-20 பேர் சம்மந்தம் இருந்தும்/இல்லததுமாய் விடாமல் பேசிகிட்டே இருந்தா? #தலைவலிதான்
• ட்விட்டரில் இருப்பதனால் பல புதிய சிந்தனை, நகைச்சுவை, செய்தி போன்றவற்றை குடும்பத்தாரோடு பகிர்ந்து 'திடீர் புத்திசாலி' ஆனது நான் மட்டும்தானா?
• RT வரும் பின்னே. என் ட்விட் வரும் முன்னே. ஹிஹி
• த்விட்டர்ல கொட்ட ணும்னா அளந்து கொட்டனும் #140
• த்வீட்டுகள் வலை பாய்ந்தபிறகு RT ஆவது நிறுத்தப்படுகிறது. #அவதானிப்பு
• ட்விட்டர் எனது ஆசிரியரை விட உயர்ந்தவன். அடிக்கடி 'You will have to be more clever' ன்னு அட்வைஸ் செஞ்சிட்டே இருக்கு.
• 'எழுதி கீச்சிட்டேன்' என்பது த்விட்டருக்கே பொருந்துது.
• ட்விட்டரில் கவிதை வரும் முன்னே! பூமியில் மழை வரும் பின்னே!
• ஆ.வி.யில் இல்லா விட்டால் என்ன, அவனின் தங்கை பத்திரிகையில் வந்துள்ளது என் த்வீத். #அவள் விகடன்
மொக்கை / கடி கீச்சுக்கள்
• ரேடியம்ல பண்ண பிள்ளையார், இருட்டுல நல்லா தெரியும் - கடைகாரர். பகல்லயும் நல்லாதானே தெரியுது - நான். ஞே - கடைகாரர்
• ஏப்ரல் மாசத்தில் பரேடு நடந்தாலும் அதற்கு பேர் மார்ச் பாஸ்ட்தான்.
• உப்பிட்டவரை உள்ளளவும் நினை #எப்படி மறக்க முடியும் வெறும் உப்பை சாப்பிடக் கொடுத்தவங்களை ?
• தலையில் நட் சரியாக பொறுத்தப்படவில்லை என்றால், அது கழண்டு காலில் ஆணியாக வரும்.
• பெருக்குவது, கூட்டுவது - கணக்குல வேணா இது ரெண்டும் வேற வேற, ஆனா வீடு சுத்தம் செய்யும்போது ரெண்டும் ஒண்ணுதான்.
• எதிர் கீச்சு, தொடர் கீச்சு, பாதிப்பு கீச்சு - இவைகளே சுலபமாக உள்ளது. சிறு வயதில் படிப்பில் 'starting trouble' இருந்ததால் இருக்குமோ?
• 'Came out well' ன்னு சமையலுக்கு சொல்கிறார்களே, கடாய்'லிருந்து வந்ததை சொல்கிறார்களா அல்லது வாயிலிருந்து வந்ததையா?
• Awesome, attitude, chemistry - இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்த தெரியுமானால் நீங்கள் டான்ஸ் போட்டியின் நடுவராக தகுதியுள்ளவர்!
• கார்த்தால ட்விட்டர் பார்க்கலாம்னா எல்லாரும் அபசகுனமா 'காலை வணக்கம்' ன்னு சொல்றாங்க. கையால வணக்கம் சொன்னாங்கன்னா பரவாஇல்லை.
• உயிரில்லாத GATE க்கே எக்ஸாம் இருக்கும்போது, CAT எக்ஸாம் இருக்காதா என்ன?
• டிவியில் கோட் (goat) இருக்கிறது என்றாள் என் மகள். கோட் மட்டும் எப்படி இருக்கும், உள்ளே கோபிநாத்தும் சேர்ந்து தானே இருக்கணும்?
• ESC க்கும், ENTER க்கும் நடுவில் அனைத்து கீக்களும் அடங்குவது, ஜனனத்திற்கும், மரணத்திற்கும் நடுவில் வாழ்க்கை என்பதைத் தழுவியா?
• ரூபாய் நோட்டுகளுக்கு பிடிக்காத விளையாட்டு செஸ் தான். 'Check' என்று தானே சொல்கிறோம்.
• யாஹூ ப்ரோபைலில் எதையோ மாற்ற முயற்சிக்கையில், 'bad wording' என்ற எர்ரர் வருகிறது. கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்களோ?
• நீ என் மூச்சா, இல்லை நான் உன் மூச்சா - நாம் பேசிக்கொண்டிருக்கையில், உன் பேன்ட்இல் நம் மழலையின் மூச்சா. அவ்வவ் :)
• நீ என்னைப் பார்த்தாய் - காதலாய், நான் உன்னைப் பார்தேன் - கெஞ்சலாய். #பவர் கட்' டினால் சாதாரண பார்வை கூட இப்படி தோன்றுகிறது. #ஹி ஹி
• வெட்டப்பட்ட வெள்ளை முடிதான் மறுபடியும் வளர்ந்து, எனக்கு முடி வளர்வதை உறுதி செய்ய வேண்டுமா? அடச்சே
• சமயலறையில் செய்யப்படும் ஒவ்வொரு புதியதான ரெசிபிக்கும், அன்றைக்கே இன்னொருவர் கதறியழக் கூடும். எ.கீ
• அகங்காரம் என்பது என்னன்னா 'நான் எதுக்கு சொல்லணும்? ம்ஹும் மாட்டேன்.'
• 'இவ்வளவு பொறுத்து போகிறாயே' - பெருமை என்கிறாள் அம்மா - எருமை என்கிறாள் நண்பி. #நண்பிடா!
• மிகவும் கூச்ச கீச்ச சுபாவம் கொண்டவர்கள் DM இல் மட்டும் பேசுவார்கள். தொ.கீ. (தொடர் கீச்சு)
Subscribe to:
Posts (Atom)