September 14, 2012

மொக்கை / கடி கீச்சுக்கள்

ரேடியம்ல பண்ண பிள்ளையார், இருட்டுல நல்லா தெரியும் - கடைகாரர். பகல்லயும் நல்லாதானே தெரியுது - நான். ஞே - கடைகாரர்

ஏப்ரல் மாசத்தில் பரேடு நடந்தாலும் அதற்கு பேர் மார்ச் பாஸ்ட்தான்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை #எப்படி மறக்க முடியும் வெறும் உப்பை சாப்பிடக் கொடுத்தவங்களை ?

தலையில் நட் சரியாக பொறுத்தப்படவில்லை என்றால், அது கழண்டு காலில் ஆணியாக வரும்.

பெருக்குவது, கூட்டுவது - கணக்குல வேணா இது ரெண்டும் வேற வேற, ஆனா வீடு சுத்தம் செய்யும்போது ரெண்டும் ஒண்ணுதான்.

எதிர் கீச்சு, தொடர் கீச்சு, பாதிப்பு கீச்சு - இவைகளே சுலபமாக உள்ளது. சிறு வயதில் படிப்பில் 'starting trouble' இருந்ததால் இருக்குமோ? 

'Came out well' ன்னு சமையலுக்கு சொல்கிறார்களே, கடாய்'லிருந்து வந்ததை சொல்கிறார்களா அல்லது வாயிலிருந்து வந்ததையா?

Awesome, attitude, chemistry - இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்த தெரியுமானால் நீங்கள் டான்ஸ் போட்டியின் நடுவராக தகுதியுள்ளவர்!

கார்த்தால ட்விட்டர் பார்க்கலாம்னா எல்லாரும் அபசகுனமா 'காலை வணக்கம்' ன்னு சொல்றாங்க. கையால வணக்கம் சொன்னாங்கன்னா பரவாஇல்லை.

உயிரில்லாத GATE க்கே எக்ஸாம் இருக்கும்போது, CAT எக்ஸாம் இருக்காதா என்ன?

டிவியில் கோட் (goat) இருக்கிறது என்றாள் என் மகள். கோட் மட்டும் எப்படி இருக்கும், உள்ளே கோபிநாத்தும் சேர்ந்து தானே இருக்கணும்? 

ESC க்கும், ENTER க்கும் நடுவில் அனைத்து கீக்களும் அடங்குவது, ஜனனத்திற்கும், மரணத்திற்கும் நடுவில் வாழ்க்கை என்பதைத் தழுவியா?

ரூபாய் நோட்டுகளுக்கு பிடிக்காத விளையாட்டு செஸ் தான். 'Check' என்று தானே சொல்கிறோம்.

யாஹூ ப்ரோபைலில் எதையோ மாற்ற முயற்சிக்கையில், 'bad wording' என்ற எர்ரர் வருகிறது. கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்களோ?


நீ என் மூச்சா, இல்லை நான் உன் மூச்சா - நாம் பேசிக்கொண்டிருக்கையில், உன் பேன்ட்இல் நம் மழலையின் மூச்சா. அவ்வவ் :)

நீ என்னைப் பார்த்தாய் - காதலாய், நான் உன்னைப் பார்தேன் - கெஞ்சலாய். #பவர் கட்' டினால் சாதாரண பார்வை கூட இப்படி தோன்றுகிறது. #ஹி ஹி

வெட்டப்பட்ட வெள்ளை முடிதான் மறுபடியும் வளர்ந்து, எனக்கு முடி வளர்வதை உறுதி செய்ய வேண்டுமா? அடச்சே

சமயலறையில் செய்யப்படும் ஒவ்வொரு புதியதான ரெசிபிக்கும், அன்றைக்கே இன்னொருவர் கதறியழக் கூடும். எ.கீ

அகங்காரம் என்பது என்னன்னா 'நான் எதுக்கு சொல்லணும்? ம்ஹும் மாட்டேன்.'

'இவ்வளவு பொறுத்து போகிறாயே' - பெருமை என்கிறாள் அம்மா - எருமை என்கிறாள் நண்பி. #நண்பிடா!



மிகவும் கூச்ச கீச்ச சுபாவம் கொண்டவர்கள் DM இல் மட்டும் பேசுவார்கள். தொ.கீ. (தொடர் கீச்சு)

No comments:

Post a Comment