எனது பழைய கலிக் என்னுடன் போனில் பேசும்போது ஒரு விஷயம் சொன்னார். "நம்ம பாஸ் இத்தாலியிலிருந்து அடிக்கடி Where are you? ன்னு மெயில் பண்ணறார். ஆனா நான் தான் reply பண்ணறதே இல்லை". நான் பரவா இல்லையே என நினைத்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்த அந்த தோழி அவருடைய மெயில் பாக்ஸ் எனக்கு காண்பித்தார். அப்புறம் தான் எனக்கு விளங்கியது, அவை automated reminders from a social networking site called WAYN.
நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்று அவரை கிண்டல் பண்ணி தீர்த்து விட்டேன்.
****************
ரோட்டில் எச்சை துப்புவது என்பது அந்த பழக்கம் இல்லாத அனைவரும் வெறுக்க தக்க விஷயம்.
சில வருடங்களுக்கு முன் நானும், என் கணவரும் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது யாரோ ஒருவன் எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்தான். சற்றே இடைவெளி இருக்கும்போது 'கர்ர்ர் தூ' என்று துப்பிவிட்டான். எங்களுக்கு ஒரே அருவருப்பு. என் கணவரோ "அவன் என்னை பார்க்கல போல" என்றார் கோபமாக (முறைத்துக் கொண்டிருந்தாராமாம்). உடனே நான் "ஏன், உங்களை பார்த்திருந்தால், உங்கள் மேல் துப்பி இருப்பானா" என்று விழுந்து(2) சிரித்தேன்.
அவருக்கும் சிரிப்பு வந்தாலும், "சரி சரி, நீ அடிச்ச ஒரே ஜோக்குக்கு எவ்ளோ நேரம் நீயே சிரிப்பே" என்று மீசையில் மண் ஒட்டாதவாறு இருந்தார்.
No comments:
Post a Comment