October 31, 2013

தீபாவளி என்றாலே...



நடுத்தர வயதடைந்து விட்டதால், என்ன நாள் / பண்டிகை என்றாலுமே, பல நினைவுகளை அது கிளருகிறது. அப்படி எனக்கு இந்த தீபாவளி பல பழைய நினைவுகளை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

என்னுடைய பால்யம்(மும்) ஏழ்மையிலேயே கழிந்திருக்கிறது. எனக்கு இரண்டும் அண்ணா என்பதால், நான்தான் வீட்டில் செல்லம் என்பது சொல்லத் தேவையில்லை. என் அப்பாவும், பெரும்பான்மையான (மகளைப் பெற்ற) அப்பாவைப்போல் தங்கமீன் அப்பாதான்.

என் அண்ணனுடன், என் மாமாவின் நண்பரின் பட்டாசு கடைக்கு, தீபாவளியின் முன் தினம் இரவு போய், ஓசி பட்டாசு வாங்கி வருவது - தொலைகாட்சி மோகம் இல்லாத அக்காலங்களில், எங்களின் பெரிய கசின் கூட்டத்தோடு ராகவேந்திர மடத்திற்கு சென்று, தீபாவளி அன்று அங்கு தரும் எண்ணையை தலையில் தேய்த்து கொள்வது - அண்ணன்கள் விடும் பட்டாசை பார்ப்பது (எனக்கு பயம் இப்போதும்) - அம்மாவோடு தீபாவளி அன்று மதியம் என் மாமா வீட்டிற்கு சென்று, பாட்டியை நமஸ்கரித்து விட்டு, மாமா மகள்களுடன் விளையாடுவது - இன்னும் சில நினைவுகள் இருந்தாலும் என்றுமே மறவாத தீபாவளியாக ஒன்றை அமைத்துவிட்டது விதி.

எவ்வருடமுமே இல்லாத திருவருடமாக, தீபாவளிக்கு எனக்கு பாவாடை சட்டை, அதுவும்  ரெண்டு மாதத்திற்கு முன்னமேயே வாங்க அப்பா-அம்மாவுடன் கடைக்கு சென்றாகிவிட்டது. பட்டு இல்லை என்றாலும், பார்டர் போட்ட, ஜரிகை வைத்த பளப்பள பாவடைகளில் நான் அடம் பிடித்து வாங்கியது 'கருப்பு நிறத்தில் அரக்கு கலர் பார்டர்' போட்ட பாவாடைத்துணி. அம்மாவிற்கு பண்டிகைன்னு வாங்குவது கருப்பாக இருப்பதில் விருப்பமில்லை. ஆனால் அப்பாதான் 'தங்கமீன்' வகை ஆயிற்றே! அதையே வாங்கிக் கொடுத்து விட்டார்.

அந்த வருடம்தான் சிறிது பணம் புழங்கியது போலும் அப்பா கைகளில், பட்டாசு கூட 'வாங்கி'க் கொடுப்பதாய் கூறி இருந்தார். ஆனால் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போது, ஒரு ஹார்ட் அட்டாக்கினால், இறந்தே விட்டார். :'(

வளர்ந்து, பல மூட நம்பிக்கைகளை, நான் தூக்கி எறிந்த போதும், பண்டிகைன்னா கருப்பு வாங்கக் கூடாதுங்கிறது மட்டும் இன்றும் கடைப் கடைபிடிக்கிறேன்.

9 comments:

  1. So very sad. What a tragedy. Really feel for you. I am sure your father is with you in spirit till today and will always be with you as he was so loving. A very touching post.

    amas32

    ReplyDelete
  2. கடைசி இரு பத்திகள் மிகுந்த அதிர்ச்சி..புரிகிறது.

    ReplyDelete
  3. sorry about your father.. I am sure you are happy that he has left wonderful memories with you as a Thangameengal Appa

    ReplyDelete
  4. @Amas amma, yes even I believe in that. :-)

    @Nat, Hmmm. thanks for reading :-)

    @yamuna, yes, I have a treasure of his memories with me. thanks for commenting. :-)

    ReplyDelete
  5. உங்கள் பதிவு தீபாவளிக்கு முந்தைய நாள் படித்தேன் .கமெண்ட் போட வேண்டும் என்பதற்காகவே இத்தனை நாள் ஆகிவிட்டது. இவ்வருடம் நானும் கருப்பு வித் பிங்க் தான் எடுத்தேன்.எப்பவுமே எடுத்ததில்லை.என் அம்மாவும் நல்ல நாளில் கருப்பு அணிவதை விரும்ப மாட்டார்கள் என்பதால். ஆனால் உங்க பதிவைப் படிக்கவும் மனசு மாத்தி அந்த உடை உடுத்தாமல் வேறு உடுத்திட்டேன். இனி எப்பவுமே வழக்கத்தை மாத்தக் கூடாது என்ற உறுதியும்.. சில செண்டிமெண்ட்ஸ் பிறருக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம். அதன் பின்பு நமக்கு ஆத்மார்த்தமான ஒரு பிரியம் கலந்திருக்கும் அது கெடாமல் பார்த்துக் கொள்வோம் :) ராஜு முருகன் தனமின்றி யதார்த்தமான வரிகளுடன் ஒரு பதிவு. எனக்கு என் தந்தையை நினைவூட்டி விட்டது :(

    ReplyDelete
    Replies
    1. உமா, உங்களை பாதித்து விட்டது என் பதிவு. இதற்கு மகிழ்ச்சியை விட வருத்தம் கொஞ்சம் கூடுதலா இருக்கு. தீபாவளிக்கு எடுத்த டிரெஸ்ஸை போடாததுக்கும், அப்பாவின் நினைவு வந்ததாய் கூறுவதற்கும் - சாரி.

      ராஜு முருகனை படித்ததில்லை. விகடனில் எழுதுவார் தெரியும். நான் படித்ததெல்லாம் சுஜாதா மட்டுமே. சுகாவின் மூங்கில் மூச்சு பிடிக்கும். வேறு யாரையுமே படித்ததில்லை. ஆனால் ராஜு முருகன் போல இல்லைங்கிறதெல்லாம், ஹிஹி, என்ன சொல்றதுன்னு தெரில, கொஞ்சம் ஓவரா தெரிது.

      :-)

      Delete
  6. ராஜு முருகன் தனமின்றி என்பது என் பாராட்டே..எனக்கு ஆரம்பத்தில் அவரது எழுத்துக்கள் கவர்ந்தது போல போகப் போக பிழிய மெனக்கெட்டது போல இருக்கும் , அது போல அன்றி நீங்க உங்க பாணியில் எழுதியதே சட்டென பாதித்து விட்டது, மேலும் தீபாவளிக்கு கருப்பு உடை அணியாததில் நல்லதும் உண்டோ என
    நினைக்கும் அளவுக்கு மறு நாள் நடந்தது ஒரு நிகழ்வு. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போயிட்டு அங்கே இரவில் பஸ் பிடிக்க ரயில்வே கிராசிங் கடந்தாக வேண்டிய நிலை.நாங்கள் கடந்து இறங்கி இரண்டடி தான் நடந்திருப்போம் விர்ரென ரயில் கடந்து சென்றது.அம்மா தான இறுதியாக வந்தாங்க
    .கொஞ்சம் முந்தி இருந்தால் என்ற கற்பனையே எனக்க் கொடூரமாக இருக்கிறது.அன்றைய இரவு இனிமையாக கடந்ததுகு முருகனுக்கு நன்றியும் உங்க பதிவையும் நினைச்சுப் பார்த்தேன் .ஏதோ நல்ல நேரம் ன்னு வந்துட்டேன் :)
    இந்த கருப்பு உடை சமாச்சாரம் மூடத்தனம் என பிறருக்கு தோன்றினாலும் நல்லவேளை பண்டிகை தினத்தில் உடுத்தவில்லை என ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. OMG!
      நல்ல வேளை! :-)
      நீங்க சொல்வதுபோல சில செண்டிமெண்ட்ஸ்ஸும் நல்லதுதான்.

      Delete