September 14, 2012

ட்விட்டர் பற்றிய கீச்சுக்கள்


DP, அதிலிருக்கும் போஸ் இவை அவரவர் கீச்சும் கீசுகளுக்கு ஒத்து போவதை உணர்கிறேன்.

நல்ல வேளை, ட்விட்டர் ஒலி வடிவத்தில் இல்லை. ஒரு 10-20 பேர் சம்மந்தம் இருந்தும்/இல்லததுமாய் விடாமல் பேசிகிட்டே இருந்தா? #தலைவலிதான்

ட்விட்டரில் இருப்பதனால் பல புதிய சிந்தனை, நகைச்சுவை, செய்தி போன்றவற்றை குடும்பத்தாரோடு பகிர்ந்து 'திடீர் புத்திசாலி' ஆனது நான் மட்டும்தானா?

RT வரும் பின்னே. என் ட்விட் வரும் முன்னே. ஹிஹி

த்விட்டர்ல கொட்ட ணும்னா அளந்து கொட்டனும் #140

த்வீட்டுகள் வலை பாய்ந்தபிறகு RT ஆவது நிறுத்தப்படுகிறது. #அவதானிப்பு

ட்விட்டர் எனது ஆசிரியரை விட உயர்ந்தவன். அடிக்கடி 'You will have to be more clever' ன்னு அட்வைஸ் செஞ்சிட்டே இருக்கு.

'எழுதி கீச்சிட்டேன்' என்பது த்விட்டருக்கே பொருந்துது.

ட்விட்டரில் கவிதை வரும் முன்னே! பூமியில் மழை வரும் பின்னே!

ஆ.வி.யில் இல்லா விட்டால் என்ன, அவனின் தங்கை பத்திரிகையில் வந்துள்ளது என் த்வீத். #அவள் விகடன்

No comments:

Post a Comment