இது விருதுகளுக்கான சீசன். நான் வித்யாசமாக prepare செய்ய ஆரம்பித்தால், ஓரளவு விருதுகள் தேறியது. இவை அனைத்தும் நான் என் மகளுக்கு கொடுக்கும் விருதுகள்.
1. ஆள் மயக்கி விருது - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, புதிதாக சந்தித்தாலும் எப்படியோ அனைவரையும் attractட்டி விடுவாள்.
2. சிறந்த கதை சொல்லி விருது - வெறும் பறவைகள்/ மிருகங்கள் உள்ள புத்தகத்தை வைத்தே கதையை இட்டுக் கட்டி சொல்லிவிடுவாள்.
3. 'தல' விருது - நான் 'தல' ரசிகைன்னா, என் மக 'walk' ரசிகை. எப்போதும் நடந்துகொண்டே இருப்பாள்.
4. இருட்டு கடை அல்வா விருது - இரவு 11 மணி ஆனாலும் விளக்கெல்லாம் அனைத்து விட்டிருந்தாலும் ஏதோ விளையாடிக் கொண்டே இருப்பாள்.
5. எது உன்னுதோ அது என்னுது, எது என்னுதொ அதுவும் என்னுது விருது - இந்த விருது 'Self explanatory'.
6. என் friendட போல யாரு மச்சான் விருது - ஒருநாள் நானும் அவளும் ஒரே கலரில் உடை உடுத்தி இருந்ததால், அவ பாடின பாட்டு. அடுத்த நாளே பள்ளியிலிருந்து வந்தவுடன், அதை கொஞ்சம் மாற்றி 'என் friend நிரஞ்சன் போல யாரு மச்சான்'ன்னு பாடினாளே பார்க்கணும்.
8. Talent Inducer - எனக்குள் இருந்த சமையல் திறமையை வெளிக்கொணர்ந்தவள். அவ்வ்
9. Home Food Eater (?!) - ஹோட்டலுக்கு போனால் நாங்கள் நன்கு சாப்பிட, அவ வெறும் அந்த சாலட்ல இருக்குற வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு, டம்ப்ளர் நிறைய தண்ணி குடித்து, வீட்டுக்கு வந்தபின் youtube பார்த்துக் கொண்டே இட்லியை சாப்பிடுவதால்.
10. Baby. Complaint - சதா எதை/யாரைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டே இருப்பதால்.
11. Best Adviser - மற்ற குழந்தைகளுக்கு அட்வைஸ் மழை பொழிவதால். (துப்ப கூடாது, ஒழுங்கா சாப்பிடனும்; குட் கேர்ள்ளா இருக்கணும் etc.)
12. Best Entertainer - அடுத்தாத்து அம்புஜத்தை பாட்டை முழுதாக, ஓரளவு ஆக்க்ஷனுடன் பாடுவாள். Youtube புண்ணியத்தில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலா ரெண்டு ரைம்ஸ்சாவது சொல்லுவா.
13. Best Nose-Cutter - அவளுடன் பழகும் எல்லாருக்கும், ஒரு மூக்குடைப்பாவது உறுதி. ஒருமுறை நான் ஏரோப்ளேன் வரைந்தால், அதை மீன் என்று சொன்னாள்.
14. Selective Appetite - முறுக்கு, சிப்ஸ் தவிர மற்ற எல்லாமே, அவ மூட் பொறுத்துதான். அல்லது அவ சாப்பிடுவது அந்நாளில் என் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. பெரும்பாலும் எனக்கு துர்-அதிர்ஷ்டம் தான்.
15. பேசும்போது நல்லா வக்கணையா பேசு விருது - 'அம்மா, நல்லா சாப்பிட்டாதான் பலசாலியா இருக்கலாம். நான் இனிமே நல்லா சாப்பிடுவேன்மா'ன்னு சொல்லிட்டு, செயல்ன்னு வரும்போது என் பொறுமையை சோதிப்பாள்.
16. Baby Slim Beauty - மேல் சொன்ன காரணங்களுக்காக அவ மிக ஒல்லியா இருப்பா. எனவே இந்த விருது.
17. Terror Teacher - டார்க் ரூம்ல போட்டுடுவேன், அம்மாகிட்ட அனுப்ப மாட்டேன்ன்னு ஒரு டசன் பயங்களைக் காட்டுவாள் அவள் டீச்சர்ராக இருக்கும் விளையாட்டில்.
18. Take It Easy - எங்க விழுந்து எங்க அடிப்பட்டாலும், சாதரணமா எழுந்து போயிட்டே இருப்பா. இல்லன்னா 2 mins நூடுல்ஸ் மாதிரி அழுகை.
19. Best Accommodative Baby - எனக்கு உடம்பு முடியாதபோது, ஒரு வாரம் என்னை விட்டு அவ அத்தையிடம் சமர்த்தாக இருந்ததால்.
20. Tongue Twister - beach-jeap, kitchen-chicken இவற்றை சரியாக மாற்றி உபயோகிப்பா ஒவ்வொரு முறையும்.
21. ஜென் Award - அவள் பிறந்த நாளுக்காக 5,6 உடைகளை அவளுக்கு கொடுத்தபோது 'என் கிட்டதான் நிறைய ட்ரெஸ் இருக்கேம்மா, எதுக்கு இவ்ளோ வாங்கின' ன்னு சொன்னதற்காக.
22. செல்லம் - மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் செல்லம் அவள்.
என்ன, உங்களுக்கும் அவளை பிடித்து போயிற்றுதானே!
:))அம்மாவின் பார்வையில்தான் குழந்தை எத்தனை அழகு!!!
ReplyDeleteகுழந்தைகள் அழகுதான்..:)
அத்தனை விருதுகளும் அழகு விருதுகள்..சூப்பர்.
ReplyDeleteARumainga sudha, very cute tale of ur daughter , so many awards huh, very nice, as u said liked ur daughter! :) happy new year 2013
ReplyDelete"ஆஹா அம்மா " அவார்ட் கோஸ் டூ சுதா! :-))
ReplyDeleteஇதை எல்லாம் அழகாக பகிர்ந்ததற்கு சிறந்த அம்மா விருது உங்களுக்கு :-)
ReplyDeleteamas32
Girl Krishna and mommy Yashotha.. Loved your pair.. Check if she likes butter...
ReplyDelete