June 30, 2013

மகளதிகாரங்கள் - 2

These are the tweets that I tweeted about my daughter. Most of them are from real experiences though few of them are decorated with imagination.
  • கலரிங் செய்யும்போது கையோடு சேர்ந்து தலையும் அசையும் என் மகளுக்கு. :-)
  • மானு: அம்மா, ரன்னிங் ரேஸ் விளையாடலாம். நான்: எனக்கு ஓட வராதும்மா. மானு: நீ ஆமை மாதிரி மெள்ள நட, நான் முயல் மாதிரி ஓடுவேன். #Talent2Convince
  • என் நீஸ் சஹானாமகள் மானு ரெண்டுபேருமே chatter பாக்ஸ். என் நீஸ் எதையோ 5 நிமிடமாக சொல்லிக்கொண்டிருக்க, மானு சொல்கிறாள் -என்னை பேசவே விட மாட்டேங்கிறா. :D
  • புது டிரஸ் போட்டுக்கொண்ட மானுவிடம், நெய்பர்: டிரஸ் நல்லா இருக்கு. என்ன விசேஷம்? இவ: எனக்கு வெட்டிங் டே. :-D
  • சாப்பிடல், பல் தேய்த்தல் போன்ற கஷ்டமான விஷயத்தில் ரீசென்ட்டா சேர்ந்தது, மகளை வீட்டுக்கு வர வைத்தல். எந்நேரமும் வெளியே/யார் வீட்டிலாவது.
  • முதல் மரியாதை சிவாஜி மாதிரி, அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு குழந்தையின் குரல் கேட்டாலும் என் மகளுக்கு ஜெர்க் ஆகும். அடுத்த நொடி வெளியே ஓடிடுவா!
  • தன் பொம்மையை அடுத்த குழந்தையிடமிருந்து திரும்பப் பெற என் மகள் சொல்கிறாள் 'உனக்கு கை வலிக்கும். என்கிட்டே குடுத்துடு'.
  • எம் பொண்ணு 'பே ச்கூல்' (play school) ன்னு தெரியாம உண்மைய சொல்றா!
  • நானும், என் மகளும் ஒரே நிறத்தில் உடையணிந்தால் முன்பெல்லாம் 'same pinch' சொல்பவள், இப்போது 'என் friendடப் போல யாரு மச்சான்'னு பாடுகிறாள்
  • "அம்மா, என்ன பாரு, சிரி"ன்னு என் மகள் சொல்லும்போதே தெரிந்து விடுகிறது, அவள் ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்று. :)
  • "மானு, ஏம்மா உனக்கு மிஸ் கைல 'ஸ்டார்' போட மாட்டேங்கறாங்க" என்றால் "என் கைலதான் மருதாணி இருக்கே. ஸ்டார் போட இடமில்ல" என்கிறாள்.
  • மகள் பல் தேய்த்தபின், பேஸ்ட்டை விழுங்குவதற்குள், ஒரு விரலால் அவள் வாயை வழித்து கீழே போட்டால், 'அம்மா pasteடை ஏன் வேஸ்ட் செய்றே'ங்கிறா.
  • சாமி ரூம் குப்பையாக இருக்குது என்றேன். உடனே மகள் அங்கு சென்று 'சாமி, ஏன் குப்பை போட்ட? உன் ரூம சுத்தமா வச்சிக்க தெரியாதா' என்கிறாள்.
  • Spread Cheeseஐ விரலால் எடுத்து மகளுக்கு ஊட்டினேன். அதை சாப்பிட்டு 'அம்மா, cheeseம் நல்லா இருக்கு, உன் விரலும் நல்லா இருக்கு' என்கிறாள். :)
  • 'சஹானா சாரல் தூவுதோ' பாடலை பாடவிடாமல் 'ஜனனி ஜனனி' பாட சொல்கிறாள். காரணம் சஹானா என் niece.
  • 'மானு, பால் ஆறிட்டா நல்லா இருக்காது, குடி'. சிறிது கழித்து 'பால் ஆறிடுச்சு, குடிம்மா'. மானு:ஆறிட்டா நல்லா இருக்காதுன்னுட்டு குடிக்கசொல்றே?
  • என் மகள் 'பாபா ப்ளாக்ஷீப்'பும், 'எபிசிடி'யும் கலந்து கட்டி பாடும்வரை நிஜமாகவே நான் உணரவில்லை இரண்டும் ஒரே மெட்டு என்று.
  • பேப்பர் கப்பல் செய்தால் கூட அம்மா கப்பல், அப்பா கப்பல், பாப்பா கப்பல், பாட்டி கப்பல், தாத்தா கப்பல் செய்ய வேண்டும் மானுவுக்கு. :-)
  • மானுவோட ஃப்ரெண்டு, LKG படிக்கற அந்த கேஷவ் அண்ணாவ பார்த்தே ஆகணும் நான். எல்லா புது பாட்டையும் கத்துகொடுத்துடறான் இவளுக்கு
  • பொரி உருண்டை சாப்பிடக் கொடுத்தால், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'ங்கிறா பொண்ணு. இதெல்லாம் எங்கே கேள்விப்ப்படுறான்னே தெரியல. :-)
  • நான் மானுவை அதட்டும்போதேல்லாம் 'அம்மா, நீ யார் ஃப்ரெண்டு?'. 'உன் ஃப்ரெண்டுதான்.' 'அப்போ ஏன் திட்டுறே?'. கோவம் போய் புன்னகை நிச்சயம். :-)
  • உன் ஃப்ரெண்ட்ஸ் பேர் சொல்லுன்னதும் நிரஞ்சன், கோகுல், சதீஷ்ன்னு சொல்லும்போதே அவர் 'என்னடி ஒரு பொண்ணுபேர் கூட சொல்லமாட்டறா' என்கிறார்
  • பாசமாக விளையாட கூப்பிட்டு, பட்டு பட்டுன்னு (சில சமயம்) அடிக்கறா என் பொண்ணு பக்கத்து வீட்டு குழந்தையை. :-(
  • ஒரு பறவையை பார்த்து கேட்கிறாள் 'அது ஏன் கோபமாக இருக்கிறது' என்று. நான் 'அது angry bird, அப்படித்தான் இருக்கும்'. என்ன புரிந்ததோ பாவம்.
  • குரு பிரம்மா குரு விஷ்ணு ..... சப்பச்சி குருவே நமக - என் மகள் மழலையில்!!
  • அம்மா, யாரு நான் தூங்கும்போது முகத்துல கொசு வெச்சதுன்னு கேக்கறா மானு. பாவம் குழந்தைகள். கொசுக்கள்! டவுன்! டவுன்!
  • அம்மா, cowக்கு இங்கிலிஷ்ல domestic animal ம்மா - என் மகள்!
  • என் பொண்ணு பாடுறா "என் ப்ரெண்ட நிரஞ்சன் போல யாரு மச்சான்". ;-)
  • "மானு, உன்னப் பத்தி த்விட்டர்ல சொல்லிருக்கேம்மா" என்றேன். "ஏம்மா என்ன பத்தி திட்டுற?" என்கிறாள். :)
  • சில்லுன்னு இருக்கேன்னு வீட்டுல செருப்பு போட்டா, விட மாட்டேன்கிறா மகள். வீட்டுல செருப்பு போடக் கூடாதுன்னு நீதானமா சொன்னே என்கிறாள்.
  • என் மகளுக்கு இட்லியைவிட இட்லிப்பொடிதான் பிடிக்குது. இட்லிப் பொடிலையே இட்லி பண்ணிக் கொடுத்துட்டா என்னன்னு யோசிக்கறேன். #TerrorMom
  • மானுவின் பாஷையில் சறுக்கு மரத்திற்கு டொய்ங், ஊஞ்சலுக்கு ஜொய்ங். :)
  • நான்: பாரதியார் பாடின பாட்டு எது? மானு: ஓடி ஓடி விளையாடு (2). // குழந்தைதானே, அதான் confuse ஆயிட்டா. :))
  • 'அம்மா, ஆன்ட்டி மூணுவாட்டி பிஸ்கட் சாப்பிடுன்னு சொன்னானாக, சாப்பிட்டுமா?' என்கிறாள் மானு அந்த ஆன்ட்டிக்கு முன்னாலேயே. :)
  • மானுவின் சமவயது குழந்தைகள் எவரும் 'இரண்டாமிடம்' என்பதை ஒப்புக்கொள்வதில்லை. எனவே நான் சொல்றது-நீயும் ஃபஸ்ட், அவளும் ஃபஸ்ட், அவனும் ஃபஸ்ட்.
  • மானுவின் தோழி 'எனக்கு அந்த பொம்மை கொடுக்கலைன்னா நான் விளையாட வர மாட்டேன்'. உடனே மானு 'சரி, இந்தா'. #WhatATechnic
  • நானும் என் மகளைப் போல் முதுக்கு (முறுக்கு) என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டேங்கிறாள். சரியா முதுக்குன்னு சொல்லும்மா என்கிறாள் :-)
  • காலி பாத்திரம் ஒரு அக்ஷயப் பாத்திரம். இல்லாத மம்மு அதிலிருந்து வந்துக் கொண்டே இருக்கும் என் மகளுக்கு. :)
  • 'அம்மா, எங்க டீச்சரும் குப்பைக்கார அங்கிள் மாதிரியே விசில் வெச்சிருக்காங்க' என்கிறாள் மகள்.
  • ரோட்டில் வரும் சோன்பப்படிக்காரனின் பெல்லின் சத்தம் மகளுக்கு கேக்காதவாறு அவளை வேறெதிலாவது engage செய்வது எங்கள் வீட்டில் நல்ல காமெடி.
  • எம் பொண்ணு ஒருமுறை என்னிடம் 'அம்மா, எனக்கு 5 அம்மா வேணும்'னா. நான் நெனச்சேன் 'நல்ல வேளை, அவ அப்பா இதை கேக்கல'ன்னு.
  • என் மகள் 'ஒருவர் தனக்கு ரொம்ப பிடிக்கும்' என்பதை விரல் விட்டு எண்ணி 5, 10 இவ்வளவு பிடிக்கும் என 'வித்யாசமாய்' சொல்வாள்.#போன கீச்சின் key
  • மாதுளம்பழ ஒரு முத்தைக்கூட மூன்று முறை கடித்து சாப்பிட என் மகளால் மட்டும்தான் முடியும்.
  • மூணரை வயதில் மொபைலில் சிட்டி ப்ளாக்ஸ் விளையாடுகிறாள் மகள். # கலிகாலம்
  • மூக்கி மூக்கி, மூக்கு மூக்கு பியர்ஸ் விளம்பரம் முழுசா நடிச்சி காட்டுரா மானு, அவ கசின் சொல்லிக்கொடுத்து. :-)
  • பார்வதி நல்ல புத்தி வரட்டும்னு பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார்ன்னு நான் சொல்ல 'அப்போ அவருக்கு புத்தி இருக்கலையா' என்கிறாள் மகள். அவ்வ்
  • ரொம்ப சீரியஸா மானு சொல்லுவா 'அம்மா, ப்ளிஸ், எனக்கு சாப்பிடாம இருக்கணும்போல ஆசையா இருக்கும்மா'.
  • 'மானு, ஸ்வீட் சாப்பிடலாமா?'. 'வேணாம்மா, உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்'. #அவ்வ்
  • தமிழையும், தாய் மொழியையும் கலந்து, ஏற்கனவே உள்ள மழழையில் குழைத்து பேசும் என் மானுவின் மொழி மிக அழகு.
  • சமான் லிஸ்ட் எழுத நோட்டும், பேனாவும் எடுத்தா, என் மகள் 'ஏனம்மா சொல்லிக் கொடுக்கப் போறே?' என்கிறாள். ரொம்ப படுத்தறேனோ அவளை? அவ்வ்.
  • புது பேனா வாங்கினா நம்ம பேர் எழுதி பார்க்கிறமாதிரிதான் புது மொபைல் வாங்கினதும் நம்ம குழந்தைய போட்டோ எடுக்கறது.
  • பலூன் ஊதுவதை பார்க்கும்போது பயந்து காது மூடிக்கொள்வாள். அது உடைந்தாலும் பயம், அழுவாள். ஆனால் ஊதிய பலூன்னா ரொம்ப பிடிக்கும். #மகள்
  • என் மகள் அவளின் சகவயது தோழிகளை வா/போ என்றும், தோழர்களை டா சொல்லியும்தான் அழைக்கிறாள். #பெண்குழந்தையாதிக்கம்
  • இரண்டு கைகளாலும் என் தலைமுடியை படிய வாரி, இருக்கும் பொட்டையே இன்னும் சரியாக வைத்து - என்னுடைய பியூட்டிஷியன் என் மகள்.#Bliss
  • வீட்டை பெயிண்ட் அடிக்கலாம்னு நினைக்கும்போது, சுவற்றில் எல்லாம் ஸ்கெட்ச் பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறாள் மகள்.
  • நான்:சின்ன வயசுல நான் சாக்லேட் கேட்டா, பல்லு போய்டும்னு பாட்டி சொல்வாங்க.நானும் சரின்னுடுவேன். மானு:அப்போ ஐஸ் கேட்க வேண்டியதுதானேம்மா?
  • உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா, என் மக வித்தியாசமா ஒண்ணு ரெண்டுன்னு விரல்களை எண்ணி ஃபைவ்/சிக்ஸ் பிடிக்கும்னு சொல்வாள். :-)
  • மகளின் பள்ளியில் ஃபோட்டோ செஷன். நான்:மிஸ் கிட்ட 'எப்போ போட்டோ தருவீங்கன்னு' கேளு. மகள்:இங்கிலீஷ்ல அத எப்படிம்மா சொல்லணும்?#OnlyEnglis.
  • "அம்மா,என்னோட கனவுல பூதம் வந்தா,கண்ணை மூடிகிட்டே உன்னை எழுப்பறேன்.நீ என் கனவுல வந்து அதை அடிச்சிடறீயா" - மகள். ஆஹா!!
  • 'ராவணனுக்கு பத்து தலைன்னா, ஒண்ணு ரியல், மத்தது மாஸ்க் தானேம்மா' என்கிறாள் மகள். :-))
  • "கையில தடவுன ஓடோமாஸ, கொசு சாப்பிட்டு, என் கையிலயே வாமிட் பண்ணிடுச்சுன்னா? உவ்வேக்" என்கிறாள் மகள். :-))
  • குல்லா போட்டுக்கோன்னு நெய்பர் சொன்னதும், 'அது குல்லா இல்ல, காஃப்' என்கிறாள் மகள் #ஸ்கார்ஃப்
  • பாட்டு பாடும்மான்னா சுமாரா பாடுவா. பாட்டு மாதிரி பாடுன்னா நல்லா ராகமா பாடுவா #மகள் ;-))
  • 'ஜானு, ஸ்வீட் பொட்டேட்டோ சாப்பிடும்மா'. டேஸ்ட் பார்த்துட்டு 'பொட்டேட்டோவை ஏம்மா ஸ்வீட்டா செஞ்சிருக்கே, எப்போதும்போல காரமா செய்'ங்றா. :-)
  • ஃபோன் பேசிட்டு வெக்கும்போது ஏம்மா பை சொல்றே? அவங்க வெளிய போகப் போறாங்களா? வெச்சிடறேன்னு சொல்லு #மகள் #அதானே :-)
  • வீட்டு சுவற்றில் இருக்கும் air crackஐப் பார்த்து, 'நம்ம வீட்டுக்கு நரசிம்மர் வந்துட்டு போய்ட்டாரா?' என்கிறாள் மகள்.
  • நேற்று டிவியில் ஹிரண்யகசிபு கடவுளைப் பார்த்து ரெண்டுகையும் மேலே நீட்டி பெரிய்ய வரத்தை கேட்கிறான். என் மகள் 'சாமிய தூக்கிகோன்னு சொல்றாராம்மா'ன்னு கேக்கறா. 
  • பொறுமையாக மகளுக்கு 'புரிஞ்சுக்கோம்மா, எனக்கு வேலை இருக்கு, நீயே விளையாடிக்கோ'ன்னா, சீரியஸ்சாக 'புரியுதும்மா, இப்போ என்னோட விளையாடு'. ;-)
  • நாம் சிறிது முகம் வாடி இருந்தாலும், நம் கன்னத்தை தன் பிஞ்சுக் கைகளில் தாங்கி என்னம்மா ஆச்சுன்னு வாஞ்சையுடன் விசாரிக்கும் மழலைகள் வரம். :-)
  • 'எனக்கு தலை வலிக்குது, படுத்தாம சாப்டுர்ரியா' என்றால், வாய்ப்பை தவற விடாமல் 'ம்ம்ம், இன்னிக்கு எனக்கு சாப்பாடு வேணாம், நீ ரெஸ்ட் எடு'ங்றா.

No comments:

Post a Comment