December 29, 2024

தவப்புதல்வி - My first published book


மகளின் பிறந்த நாளிற்கு மூன்று மாதங்கள் முன்பு, திடீரென்று தோன்றிய எண்ணத்தால், அவளைப் பற்றி, நான் ஏற்கனவே எழுதிய பல குறிப்பு / பதிவுகளை வைத்து ஒரு புத்தகம் எழுதலாம் என்று தோன்றியது. உடனே களத்தில் இறங்கினேன். அலுவல் வேலையால் சனி, ஞாயிறு மட்டுமே நேரத்தை செலவிட முடிந்தது. ஆனால் அப்படி  கிடைத்த நேரத்தில், பலமணி நேரம் தொடர்ந்து எழுதினேன். 60% content ஏற்கனவே இருந்தாலும், அதையும் திருத்த, மொழி பெயர்க்க, arrange செய்ய என்று பல எழுத வேண்டியிருந்தது. 40% புதிதாய் எழுதவும் வேண்டியிருந்தது. 

பதிப்பகத்திற்கெல்லாம் கொண்டு செல்லும் அளவுக்கு இல்லை. Self publishing என்று கூட சொல்ல முடியாது. Self printing என்றுதான் சொல்ல வேண்டும். முன்பக்க, பின்பக்க அட்டைகளை நானே Canva -வில் design செய்தேன். பின்பக்க அட்டையில் என் புகைப்படம் (எழுத்தாளர் -ன்னா சும்மாவா!), புத்தகத்தைப் பற்றிய சிறு synopsis, அணிந்துரை, எனது நன்றி என்று ஒரு proper எழுத்தாளரின் புத்தகத்தைப் போல பதிப்பித்தேன்.

"தவப்புதல்வி" என்ற தலைப்பு, என் கணவரின் பரிந்துரை. எனது விருப்பத்தில் இருந்த மற்ற புத்தக தலைப்புகள் - மனம் நிறை மகள், சுதாவின் சுந்தரி, மகளோசை, மகளதிகாரம். நண்பர்கள் - உறவினர்களுக்கு இந்த தலைப்புகளை poll வைத்து அவர்களின் விருப்பதைக் கேட்டு, முடிவு செய்தேன்.

உறவினர்கள், சில நண்பர்கள் என்று எங்கள் கூட இருந்தவர்கள்தான் இந்த புத்தகத்தை relate செய்து கொள்ள முடியும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பிறகு புரிந்தது எல்லா அம்மாவும் இந்த புத்தகத்தோடு relate செய்து கொள்ள முடியும். யார் படித்தாலும், அவர் தங்கள் குழந்தையின் மழலை நினைவுகளை மறுபடி ஞாபகப் படுத்திக் கொள்ள முடியும். ஏனென்றால் எல்லா குழந்தைகளும்,  தாய்மை உணர்வும் ஒன்றுதான்.  

புத்தகம் கைக்கு வந்த பிறகு, சில நிகழ்வுகள் எழுத மறந்தது நினைவுக்கு வந்துது. உறவினர்கள் சில நிகழ்வுகளை நினைவு படுத்தினர். இப்படி பல நிகழ்வுகள் விடுபட்டு விட்டது.       

புத்தகம் படித்து, எனக்கு ஃபோனில் அதைப் பற்றி பேசிய சிலாகித்து பேசிய அனைவரும் என்னை மகிழ்வித்தார்கள். சிலர் வாட்ஸாப் மெஸேஜ்' ஆக தன் கருத்தை அனுப்பியிருந்தார்கள். எல்லாமும் மிகவும் மகிழ்வாகவே இருந்தது. ஓரிரு எதிர்மறை கருத்தும் வந்திருந்ததுதான். 

என் தோழி, என் கசின் அனிதா ஒரு கவிதையாக தன் கருத்தை எழுதித் தந்தாள். இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.        

      




         

                              

No comments:

Post a Comment