December 31, 2012

எனது குட்டி(க்கு) விருதுகள்


இது விருதுகளுக்கான சீசன். நான் வித்யாசமாக prepare செய்ய ஆரம்பித்தால், ஓரளவு விருதுகள் தேறியது. இவை அனைத்தும் நான் என் மகளுக்கு கொடுக்கும் விருதுகள். 


1. ஆள் மயக்கி விருது - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, புதிதாக சந்தித்தாலும் எப்படியோ அனைவரையும் attractட்டி விடுவாள்.  

2. சிறந்த கதை சொல்லி விருது - வெறும் பறவைகள்/ மிருகங்கள் உள்ள புத்தகத்தை வைத்தே கதையை இட்டுக் கட்டி சொல்லிவிடுவாள்.

3. 'தல' விருது - நான் 'தல' ரசிகைன்னா, என் மக 'walk' ரசிகை. எப்போதும் நடந்துகொண்டே இருப்பாள்.

4. இருட்டு கடை அல்வா விருது - இரவு 11 மணி ஆனாலும் விளக்கெல்லாம் அனைத்து விட்டிருந்தாலும் ஏதோ விளையாடிக் கொண்டே இருப்பாள்.

5. எது உன்னுதோ அது என்னுது, எது என்னுதொ அதுவும் என்னுது விருது - இந்த விருது 'Self explanatory'.

6. என் friendட போல யாரு மச்சான் விருது - ஒருநாள் நானும் அவளும் ஒரே கலரில் உடை உடுத்தி இருந்ததால், அவ பாடின பாட்டு. அடுத்த நாளே பள்ளியிலிருந்து வந்தவுடன், அதை கொஞ்சம் மாற்றி 'என் friend நிரஞ்சன் போல யாரு மச்சான்'ன்னு பாடினாளே பார்க்கணும்.

7. Baby Engineer - மொபைல், ரிமோட் எதுவா இருந்தாலும் பேட்டரியை கழட்டி, மறுபடி பொருத்தத் தெரியும்.  

8. Talent Inducer - எனக்குள் இருந்த சமையல் திறமையை வெளிக்கொர்ந்தவள். அவ்வ்   

9. Home Food Eater (?!) - ஹோட்டலுக்கு போனால் நாங்கள் நன்கு சாப்பிட, அவ வெறும் அந்த சாலட்ல இருக்குற வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு, டம்ப்ளர் நிறைய தண்ணி குடித்து, வீட்டுக்கு வந்தபின் youtube பார்த்துக் கொண்டே இட்லியை சாப்பிடுவதால்.      

10. Baby. Complaint - சதா எதை/யாரைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டே இருப்பதால்.  

11. Best Adviser - மற்ற குழந்தைகளுக்கு அட்வைஸ் மழை பொழிவதால். (துப்ப கூடாது, ஒழுங்கா சாப்பிடனும்; குட் கேர்ள்ளா இருக்கணும் etc.)  

12. Best Entertainer - அடுத்தாத்து அம்புஜத்தை பாட்டை முழுதாக, ஓரளவு ஆக்க்ஷனுடன் பாடுவாள். Youtube புண்ணியத்தில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலா ரெண்டு ரைம்ஸ்சாவது சொல்லுவா.    

13. Best Nose-Cutter - அவளுடன் பழகும் எல்லாருக்கும், ஒரு மூக்குடைப்பாவது உறுதி. ஒருமுறை நான் ஏரோப்ளேன் வரைந்தால், அதை மீன் என்று சொன்னாள்.

14. Selective Appetite - முறுக்கு, சிப்ஸ் தவிர மற்ற எல்லாமே, அவ மூட் பொறுத்துதான். அல்லது அவ சாப்பிடுவது அந்நாளில் என் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. பெரும்பாலும் எனக்கு துர்-அதிர்ஷ்டம் தான்.        

15. பேசும்போது நல்லா வக்கணையா பேசு விருது - 'அம்மா, நல்லா சாப்பிட்டாதான் பலசாலியா இருக்கலாம். நான் இனிமே நல்லா சாப்பிடுவேன்மா'ன்னு சொல்லிட்டு, செயல்ன்னு வரும்போது என் பொறுமையை சோதிப்பாள்.  

16. Baby Slim Beauty - மேல் சொன்ன காரணங்களுக்காக அவ மிக ஒல்லியா இருப்பா. எனவே இந்த விருது. 

17. Terror Teacher - டார்க் ரூம்ல போட்டுடுவேன், அம்மாகிட்ட அனுப்ப மாட்டேன்ன்னு ஒரு டசன் பயங்களைக் காட்டுவாள் அவள் டீச்சர்ராக இருக்கும் விளையாட்டில்.    

18. Take It Easy - எங்க விழுந்து எங்க அடிப்பட்டாலும், சாதரணமா எழுந்து போயிட்டே இருப்பா. இல்லன்னா 2 mins நூடுல்ஸ் மாதிரி அழுகை.  

19. Best Accommodative Baby - எனக்கு உடம்பு முடியாதபோது, ஒரு வாரம் என்னை விட்டு அவ அத்தையிடம் சமர்த்தாக இருந்ததால். 

20. Tongue Twister - beach-jeap, kitchen-chicken இவற்றை சரியாக மாற்றி உபயோகிப்பா ஒவ்வொரு முறையும்.  

21. ஜென் Award - அவள் பிறந்த நாளுக்காக 5,6 உடைகளை அவளுக்கு  கொடுத்தபோது 'என் கிட்டதான் நிறைய ட்ரெஸ் இருக்கேம்மா, எதுக்கு இவ்ளோ வாங்கின' ன்னு சொன்னதற்காக. 

22. செல்லம் - மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் செல்லம் அவள்.

என்ன, உங்களுக்கும் அவளை பிடித்து போயிற்றுதானே!

October 20, 2012

எங்கள் வீட்டு கொலு Vs எங்கள் செல்ல வாலு




கடந்த இரண்டு வருடங்களாக டைனிங் டேபுள் மேல் மூன்று படியிட்டு, எங்கள் வீட்டு வால்'லிடமிருந்து காப்பாற்றப்பட்ட கொலு பொம்மைகளை, இந்த வருடம் 'நம்ம மானு பெரியவளாயிட்டா (மூன்று வயது!!), சொன்னா கேட்டுக்குவா. கீழ் நோக்கியே படி வை' ன்னு என்னவர் சொன்னதற்காக அப்படியே  வைக்கப்பட்டது. என்ன இருந்தாலும் காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சுதானே. :) 

ஒவ்வொரு கொலுவுக்கும் தவறாமல் எட்டிப்பார்ப்பது என் கணவரின்  கடுகடுப்பு,  ஸ்டீல் பலகைகளை முடுக்கி படிக்கெட்டுகளை அவர்தானே அமைக்க வேண்டும் :-D எப்பவும்போல இந்த முறையும் அவரது எரிச்சலை கண்டுக்காமல், சில பல ஜோக்ஸ் சொல்லி (சரி சரி ஜோக் சொல்ல முயற்சி செய்து) கூல் செய்து பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி, படிக்கெட்டுகள் செட் செய்து வைத்தாயிற்று. "நம்ம வீட்லதான் show case இருக்கே, permanentஆ கொலு பொம்மைகளை இங்கயே வெச்சிடலாமே" என்ற சமயோசித அட்வைஸ்(?!) க்கும் மையமாக சிரித்து வைத்து, பொம்மைகளை துடைக்கும் வேலையில் உட்கார்ந்து  விட்டேன். நான் தான் அடுக்குவேன் என்று அடம்பிடித்து, உதவியில் இறங்கிவிட்டாள் மகள்.

அந்த காலம் போலல்லாமல், சென்னையில் இப்போதுள்ள வழக்கம், ஒன்பது நாளில் ஒருநாள்தான் கொலுவுக்கு அழைப்பார்கள்/வருவார்கள். அதனால் தினமும் சுண்டல் வீணாவதன் கவலை இல்லை. நேற்று அனைவரையும் (20 வீடு) அழைத்தாயிற்று. நேற்று மதியம் முதலே அடை மழை. நானோ அரைகிலோ பட்டாணி காலையில் ஊறப்போட்டு சாயிங்காலம் சுண்டலும் செய்துவிட்டேன். மழை ஒருவழியாக நின்று, ஒருவழியா  எல்லாரும் வந்து, சுண்டலும் காலியாகிவிட்டது. :)

பெரியவர்களுக்கு பிளாஸ்டிக் டப்பா & ஜாக்கெட் பிட், சிறுவர்களுக்கு பென் & ஸ்கெட்ச் கொடுத்தாகிவிட்டது. மற்றபடி சம்பிரதாயமான பெரியவர்களை - பாடச்சொல்வது, சிறுமிகளை - சினிமா பாட்டானாலும் பாடுன்னு சொல்வது, வாண்டுகளை - ஸ்லோகம் சொல்லச்சொல்வது போன்றவை நடந்தது. வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்டனை போல (சுண்டலை சொல்லலீங்க, அது தனி!), என் கணவர், மகளின் புகழை பாடத் தொடங்கி விடுவார். 

இனி என் மூன்று வயது மகளின் விஷமங்கள்:

  • பெட்டியிலிருந்து எடுத்த முதல் பொம்மையே பேப்பர் மோல்ட் செய்யப்பட்ட, வாங்கி நான்கைந்து ஆண்டுகள் ஆனாலும், பளபளப்பு குறையாத கஜ லக்ஷ்மி. அவ்வளவு அழகு அந்த பொம்மை. மானு அடம்பிடித்து என்கையிலிருந்து வாங்கி விளையாட ஆரம்பித்துவிட்டாள். போகிறதென்று மற்ற பொம்மைகளை தூசி தட்டி வைக்கும்போது, 'அம்மா, என்னை பாத்து சிரி' என்று அசடு வழிந்தாள் மகள். அவள் அப்படி சொன்னாலே ஏதோ விஷமம் செய்திருக்கிறாள் என்று புரிந்துகொள்ள வேண்டும். என்னவென்று பார்த்தால், அந்த பொம்மையின் தலை வெட்டப்பட்டுள்ளது. :-(

  • அவளது பள்ளியில் நவராத்திரி கொண்டாடுவதால், ஒரு ரங்கநாதர் பொம்மை வாங்கி, 'இது உங்க ஸ்கூல் கொலுவுக்கு' என்று சொல்லி அவளிடம் கொடுத்தனுப்பினோம் சென்ற வாரம். எங்கள் வீட்டில் எல்லா பொம்மையும் வைத்த பிறகு, 'மானு, எப்படி இருக்கு நம்ம வீட்டு கொலு' என்றால் அவள் சர்வசாதாரணமாக 'பெருமாள், அனுமார் எல்லாம் வெச்சிட்டே. ரங்கநாதர் பொம்மையே இல்லை. இத போய் கொலுங்ரே?, போம்மா நீ' என்கிறாள். 

  • பொம்மையை தொடக்கூடாதுன்னு அவ்வப்போது சொல்லி சொல்லி வைப்பேன் அவளிடம். நேற்று விளக்கேற்றும்போது கவனித்தேன், தசாவதாரத்தில் கல்கி திரும்பி நின்றுக்கொண்டிருந்தார். 'ஏன் மானு இப்படி பண்ணினே?' என்றால், அவள் கூலாக 'அம்மா, அந்த சாமி சாய்பாபவ பாக்கணும்னு சொல்லிச்சு, அதான் திருப்பி வெச்சேன்.' என்கிறாள்.

  • எங்கள் வீட்டில் வேலை செய்பவர், மானுவின் முதல் தோழி. அவங்களுக்கு ஒருநாள் சுண்டல் கொடுத்து, அவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவளுக்கு சுண்டல் பிடிக்காது (வேறென்ன பிடிக்கும்னு கேக்காதீங்க. அவளுக்கு எதுமே பிடிக்காது). அதனால் அவர் சாப்பிடுவது பார்க்க பிடிக்காமல் 'ஆன்ட்டி, சுண்டல் எல்லாம் சாப்பிடக் கூடாது, பல்லுல பூச்சி வந்துடும்' என்கிறாள்.  

இதுதான் என்வீட்டு கொலுவின், எங்கள் செல்ல வாலுவின் கதை. 

நீங்க எப்போ வரீங்க எங்க வீட்டு கொலுக்கு?

September 14, 2012

Manasa born on my Dad’s day

When the doctor told us that my baby's delivery date would be October 14, 2009, I prayed that the baby be born on either the 11th, which is my dad's birthday, or the 12th, which was his 'shraardha' day. 

I was admitted to the hospital on the 12th early in the morning, but only after I ate a bit of ‘prasadham’ of my dad's 'shrardham’ around 4 pm, things started working out fine for a normal delivery. And my baby was born at night at 12.45.

 
As it crossed 12 o'clock, her birth date became the 13th. But according to our "madhwa" culture, the day ends only at 2 am, so in that sense, my baby was born on my dad’s Shrardha day only, as both the stars match.

So I believe my dad is my daughter.

And im not sure if its a destiny or a compensation from God, but im sure its a blessing.