April 23, 2012

நொறுக்க்ஸ் - Apr 23

எனது பழைய கலிக் என்னுடன் போனில் பேசும்போது ஒரு விஷயம் சொன்னார். "நம்ம பாஸ் இத்தாலியிலிருந்து அடிக்கடி Where are you? ன்னு மெயில் பண்ணறார். ஆனா நான் தான் reply பண்ணறதே இல்லை". நான் பரவா இல்லையே என நினைத்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்த அந்த தோழி அவருடைய மெயில் பாக்ஸ் எனக்கு காண்பித்தார். அப்புறம் தான் எனக்கு விளங்கியது, அவை automated reminders from a social networking site called WAYN.

நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்று அவரை கிண்டல் பண்ணி தீர்த்து விட்டேன். 

****************

ரோட்டில் எச்சை துப்புவது என்பது அந்த பழக்கம் இல்லாத அனைவரும் வெறுக்க தக்க விஷயம்.

சில வருடங்களுக்கு முன் நானும், என் கணவரும் எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது யாரோ ஒருவன் எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்தான். சற்றே இடைவெளி இருக்கும்போது 'கர்ர்ர் தூ' என்று துப்பிவிட்டான்.  எங்களுக்கு ஒரே அருவருப்பு. என் கணவரோ "அவன் என்னை பார்க்கல போல" என்றார் கோபமாக (முறைத்துக் கொண்டிருந்தாராமாம்). உடனே நான் "ஏன், உங்களை பார்த்திருந்தால், உங்கள் மேல் துப்பி இருப்பானா" என்று விழுந்து(2) சிரித்தேன்.

அவருக்கும் சிரிப்பு வந்தாலும், "சரி சரி, நீ அடிச்ச ஒரே ஜோக்குக்கு எவ்ளோ நேரம் நீயே சிரிப்பே" என்று மீசையில் மண் ஒட்டாதவாறு இருந்தார்.

April 6, 2012

நொறுக்க்ஸ் Apr 6


என் அண்ணன் பெரும்பாலும் நக்கல், காமெடி என சதா கலாட்டா  செய்துக் கொண்டிருப்பார். என் அண்ணன் சொன்ன (அடித்த?) என்னால் மறக்கமுடியாத இரண்டு காமெடிகள் கடைசியில்.

---
One of my childhood mysteries:
We all know that Half-an-hour is 30 min and Half-of-one is 0.50.

If the time is 2.30 and when someone asks me what time it is now, I used to get confused if I need to tell two-thirty or two-fifty.

Anybody in the same boat?
---

காமெடி 1:
சில வருடங்களுக்கு முன்னால், அதாவது நான் +2 படித்துக் கொண்டிருக்கையில் (சரி, சரி, பல வருடம்ன்னே படிங்க) என் அண்ணன் பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கையில், நான் பாத்ரூம் வெளியில் வராண்டா (யாரும் வரவில்லை, verandahவை தான் அப்பிடி சொன்னேன்) வில் நின்று தலை (முடி தான்!) சீவிக்கொண்டிருந்தேன். கூடவே ஏதோ பாட்டும் பாடிக்கொண்டிருந்தேன். உள்ளிருந்து என் அண்ணன் "ஏண்டி பாத்ரூம் வாசல்ல நின்னு பாடறே, யாராவது பார்த்தால் நான் சும்மா குளிக்கறேனா இல்லை தீ குளிக்கறேனாங்கர சந்தேகம் வந்துட போகுது" என்றார்.

காமெடி 2:
இதுவும் நான் +2 படிக்கும்போது நடந்ததுதான். எனக்கு எங்கள் கணித ஆசிரியரை மிகவும் பிடிக்கும். அவர் வகுப்பு எடுப்பது ஆகட்டும், டிப்ஸ் வழங்குவது ஆகட்டும், எழுது பலகை சுத்தம் செய்வது ஆகட்டும், அனைவரது கவனத்தை ஈர்ப்பது ஆகட்டும் + அவரது பெரிய உருவம், பெரிய மீசை என அனைத்தும் style தான். பெரும்பாலான மாணவர்களுக்கு ரோல் மாடல் ஆசிரியர் அவர்தான். நானும் தினமும் வீட்டில் அவர் புகழ் பாடிக்கொண்டிருப்பேன். அப்பிடி ஒருநாள் என் அண்ணனிடம் நான் சொன்னது "என் மாத்ஸ் டீச்சருக்கு எந்த கணக்கு கேள்வி சொன்னாலும், உடனே அவர் விடை சொல்லிவிடுவார்". அதற்கு என் அண்ணன் சொன்னது "நீ 17 வருஷமா சாப்பிடறே, என்னிக்காவது வாயிலிருந்து திரும்ப தட்டில் சாதம் விழுந்திருக்கா?".

April 3, 2012

நொறுக்க்ஸ் - Apr 03

நான் என் குழந்தைக்கு "ஷாம்பூ சாதம்" கொடுத்தேன் என்கிறாள் என் niece. விவரம் கடைசியில்.
---

சில வருடங்களுக்கு முன், நான் பணியாற்றிகொண்டிருக்கையில், ஒரு கலிக் கேட்டாள் "உன் பிறந்த நாளா செப் 12 ? அன்றுதானே NY Twin towers விழுந்தது?". நான் சொன்னேன் "இல்லை, அது நடந்தது செப் 11.  செப் 12 அன்று நல்லது மட்டுமே நடக்கும்".

என்ன சரிதானே?
---

சில வருடங்களுக்கு முன்னால், நான் வேலை செய்த ஆபீஸ் திருவான்மியூரில் ஒரு individual residenceக்கு shift ஆனது. என்னிடம் யாராவது எங்கே இருக்கு ஆபீஸ் என்றால், நான் சொல்வேன் "Tidel Park பக்கத்தில்". :)

அதே போல் சென்ற வாரம் ஒரு சம்பவம்...           

Next to our apartments compound, வெல்டிங் கம்பெனி மூடப்பட்டு ஏதோ ஒரு ஆபீஸ் திறக்கப்பட்டுள்ளது. 10 - 12 பவர் கட் ஆனால், அனைவரும் வெளியில் வந்து வம்படித்து கொண்டிருப்பர். ஒரு நாள் நான் அந்த ஆபீசை கடக்கையில், ஒருவர் போனில் பேசிகொண்டிருந்தார் "எனக்கு வேலை கிடைச்சிடுச்சு... அசோக் பில்லர் பக்கத்துல இருக்கு ஆபீஸ்".
நான் நினைத்து கொண்டேன் "ஒரு சந்துல ஆபீஸ் இருக்கு, எப்படி பீலா உடறான் பார்.".

என்னை போல் ஒருவன்.

---
அதே போல், நான் வேலை செய்தபோது, யாராவது எந்த கம்பெனி என்றால் "Infosearch" என்பேன். பெரும்பாலானவர்கள் உடனே கேட்பார்கள் "oh, இன்போசிஸ்ஆ?". கேட்பவரை நான் திரும்ப சந்திக்க மாட்டேன் என எனக்கு தோன்றினால், நான் மறுப்பு எதுவும் தெரிவிக்க மாட்டேன்.

சில நாட்கள் கழித்துதான் தெரிந்து கொண்டேன், என்னோடு பணிபுரியும் அனைவருக்கும் இந்த  சந்தர்ப்பம் வரும் என்று.
---

இப்போது ஷாம்பூ மேட்டர்.    

சில வாரம் முன் என் மகளுக்கு ஜுரம். சஹானா என்னிடம் "எப்படி அத்தை,  ஜானுவிற்கு fever வந்தது?". நான் "தெரியல்லை, அவளுக்கு நான் shampoo bath கொடுத்தேன், அதனால் இருக்கலாம்". உடனே அவள் "ஐயோ அத்தை, ஷாம்பூ தலையில் போட்டுக்கொள்வது, அதை ஏன் சாதத்தில் கலந்து அவளுக்கு ஊட்டினீர்கள்?". பிறகு புரிந்தது எனக்கு, நான் bath - குளியல் என சொன்னதும், அவள் bath - சாதம் என புரிந்துகொண்டதும்.

பிறகு அவளும், நானும் சிரித்ததை சொல்லவும் வேண்டுமோ?