April 30, 2022

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார், நாற்பதாகிப் பார்!


நாற்பதாகிப் பார்!


உடல் விரைந்து சோர்வடையும்

பூனை தூக்கம் தேவையென்றாகும்

வீட்டு வேலைகள் மலைப்பளிக்கும்

உடல் உறுப்புகள் பல்லிளிக்கும்.


கரும்புள்ளி, கருவட்டம்

நரைமுடி, முடிஉதிர்வு

உடல் எடை, தொந்தி

சாளேஸ்வரம், நாய்குணம்

என அனைத்தும் அதிகரிக்கும்.


மாதம் விடாமல் படுத்தும்

மாதவிடாய் தொந்தரவுகள்.

பத்து நாட்களுக்குப் படுத்தும்

PMS பிரச்சினைகள். 


குளியலறைப் பயணங்கள் அதிகரிக்கும்

காலைக்கடனும் ஒரு வேலையாகும்.


உப்பு, கார்பு, சர்க்கரையோடு

உணவின் அளவையும்,

மூச்சு, நடை பயிற்சிகளோடு

தொப்பையின் அளவையும்

குறைக்க முயல்வோம்.


பிறருக்கு ஆலோசனை, ஆறுதல்

சொன்ன காலம் போய்

நாம் யோசிக்க, புலம்ப

ஆரம்பித்திருப்போம்.


Alarm அல்ல; 

தேவைப்படுவது Reminders தான்.


பாதி தூக்கத்தில் விழிப்பு தட்டிவிட்டால்

இரவின் நீளத்தையும்

கடிகாரத்தின் சோம்பலையும்

நம் நினைவாற்றலின் எல்லையையும்

உணர்ந்து வியக்கலாம்.


பாதி அல்லது முக்கால் கிணற்றை தாண்டியாயிற்று.

சிலமுறை விடுதலைக்காகவும்

சிலமுறை  கடமையாற்றவும்

மாறி மாறி விரும்புகிறது மனது.


Aunty என்றழைக்கப்படுவது எங்களுக்கு

பிரச்சனையே இல்லை.

சக aunty களாலும் அப்படி

அழைக்கப் படுவதுதான் துயரம்.


எங்களுக்குள் இருக்கும் புகைப்பட அசுரன் விழிப்பான்

பூ பறவை, காற்று ஊற்று, மலை மழை, கோலம் மேளம் என்று

எதையும் விடாமல் எதற்காகவோ படம் பிடிப்போம்.


ஆனாலும் நம் சொந்த அகன்ற தாடைக்கு பயந்து,

Selfieயைத் தவிர்ப்போம். 

பிறர் நம்மை படம் பிடிக்கும்வரை, 

மூச்சை நன்கு இழுத்துப் பிடிப்போம்.


இத்தனை இருந்தாலும்,


நிறைய கற்(றிருப்)போம்

துணிவு கூடும்

தெளிவு பிறக்கும்

ரசனை மேம்படும்

Priorities புரியும்

பற்றின்மையின் மேல் பற்று வரும்

தேவைகள் குறையும்

தனிமை இனிமையாகும்


You'd have learned to

accept,

be resiliant and

ignore judgements of others. 

So you can rock in your own way!


அதற்காகவாவது நாற்பது+ வயதாகிப் பாருங்கள்!

1 comment: