எனது திருமணத்திற்கு பிறகு, நான் காய்கறி வாங்கச் செல்கையில் (முதல் மூன்று வார்த்தைகள் இல்லாமலும் படிக்கலாம். காய்கறி வாங்க போறோம்னாலே கல்யாணம் ஆயிடுச்சின்னுதானே அர்த்தம்!) கடைப் பெண்மணி, நான் பேசிய பிறகு சொன்னது "ஓ, உங்களுக்கு தமிழ் தெரியுமா?". இப்படி பலர் என்னிடம் வெவ்வேறு சூழலில் கேட்டதுண்டு. "என்னங்க இப்படி கேட்டுடிங்க, அது மட்டும்தான் எனக்கு உருப்படியாத் தெரியும்" ன்னு உண்மையைச் சொல்லாமல், சிரித்து விட்டு கடந்திருக்கிறேன்.
அதெல்லாம் ஒரு கனாக் காலம் என்பதுபோல, கடந்த ஓரிரண்டு வருடங்களாக என்னை வெளியாட்கள் பார்க்கும் பார்வையே வேறு.
கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக:
ஒருமுறை தையல் மெஷின் ஊசி வாங்க பழைய ஊசியை (model) எடுத்துக் கொண்டு கடைக்கு போனேன். கடைக்காரர் ஊசி மாடல் பார்த்துவிட்டு "இது R மாடல். தையல் மெஷின்லியே மார்க்கர் வெச்சி Rன்னு எழுதிக்கோங்க. இங்லிஷ்ல எழுத முடிலைன்னா தமிழ்ல இப்படி எழுதிக்கோங்க" ன்னு எதையோ சொன்னார்.
இன்னொரு முறை பல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு போயிருந்தேன். ரிசப்ஷனில் இருந்த பெண் “இந்த formஐ, fill செஞ்சிக் கொடுங்க” என்றார். அங்கிருந்தவற்றில் ஒரு ஃபார்ம் எடுத்தேன். உடனே அவர் "அது இங்கலிஷ்ங்க. தமிழ்ல வேணும்னா இத எடுத்துக்கோங்க" என்றார்.
சிலிண்டர் கடைக்கு முகவரி மாற்ற, மகளுடன் சென்றிருந்தேன். அங்கு இருந்தவர், "ஒரு லெட்டர் எழுதணும் மா" என்று என்னிடம் சொல்லிவிட்டு, "என்ன பாப்பா, நான் சொல்றேன். நீ எழுதுரியா" என்று என் மகளைப் பார்த்து கேட்டார். அவள் என்னவென்று புரியாமல் விழிக்கவே, "நீங்க எழுதுவீங்களா?" என்றார் என்னைப் பார்த்து.
இது போல இன்னும் சிலவும் இருக்கு.
இப்படி தொடர்ந்து நமக்கு நடக்கும்போது, "எப்படி இருந்த நான்" பீலிங் தான் வருது.
Simplicity, minimalist, modest, introvert, shy, அடக்கம், ஒடுக்கம் - இதெல்லாம் கலந்த கலவையா இருக்குறதுதான் என் பிரச்சினையா?
சொல்லுங்க பிரெண்ட்ஸ் சொல்லுங்க!!
No comments:
Post a Comment