December 11, 2018

டேக் இட் ஈஸி ஊர்வசி - உல்ட்டா லிரிக்ஸ்

ஏ. ஆர். ரஹ்மான் & வைரமுத்து மன்னிப்பார்களாக.

ஜல்லிக்கட்டு போராட்டம் சூடா நடந்து கொண்டிருந்த சமயம் எழுதியது 😝😆

********

தமிழனே தமிழனே, பெருமை கொள்ளு தமிழனே !
இன்று போல ஒண்ணாயிருந்தா, கவலை இல்லை தமிழனே !!
வாழ்க்கையில் வெல்லவே, பொறுமையும் ஒரு policy !
வானவில் வாழ்க்கையில், ஒற்றுமை ஒரு fantacy !!

பேசலாம் உரிமையை உரிமையாய், தமிழ் இளைஞர்கள் ஏராளம் !
வியந்ததே உலகம் முழுவதும், பாராட்டல்கள் தாராளம் !!

மத்தியும் மாநிலமும் கைவிட்டாலும், Take it easy policy!
சட்டமும் நீதியும் குழப்பிவிட்டாலும், Take it easy policy!
அரசியல்வாதி ஒரு சந்தர்ப்பவாதி, Take it easy policy!
அனைத்து கட்சியும் கலங்கிய குட்டை, Take it easy policy!

மக்களால் அனைத்தும் possible, பொறுமையால் எதுவும் feasible
அரசியல் ரொம்ப horrible, அகிம்சை is very much audible

புரட்சிகள் எதுவும் செய்யாமல், யாருக்கும் நன்மை விளையாது !
அகிம்சையை மிஞ்சிய புரட்சிகள், உலகினில் கிடையவே கிடையாது !!

கட்சிகள் இத்தனை இருந்தாலும், இவர்களால் காளைக்கென்ன பயன்?
மஞ்சினை விரட்டாமல் போனால், தைப் பொங்கல் இருந்தும் என்ன பயன்?
ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல், அலங்காநல்லூர் இருந்தும் என்ன பயன்?
உரிமைக்கு போராடவில்லையென்றால், தமிழராய் இருந்தும் என்ன பயன்?

********

No comments:

Post a Comment