March 8, 2018

பெண்கள் தினம்



வழக்கம் போல காலையில் எல்லோருக்கும் முன் எழுந்து,
காலை உணவு, டிஃபன் பாக்ஸ் உணவு, மதிய உணவு ரெடி செய்து அனுப்பி விட்டு,   
பெருக்கி, துடைத்து, கும்பிட்டு, சாப்பிட்டு,
ஃபேனுக்கு கீழ், கால் வலிக்கு இதமாக, சம்மணம் இட்டு நாற்காலியில் அமர்ந்து,


மொபைலில் டேட்டா ஆன் செய்து,
ப்ரொபைல் பிக், ஸ்டேட்டஸ் பிக், ஸ்டேட்டஸ் மெசேஜ் இவற்றை போஸ்ட் செய்து,
பெண்கள் மட்டுமே இருக்கும் நான்கைந்து குரூப்களில்,
மனதிற்கு இனிய வார்த்தைகள் அடங்கிய பலப்பல ஃபார்வர்ட்களை படித்து, அனுப்பி,
தனியாக வாழ்த்திய தோழிகளுக்கு, பதில் வாழ்த்து சொல்லி,
நானும் தனித்தனியாக சில விடுபட்ட தோழிகளுக்கு வாழ்த்து சொல்லி,
பெண்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடி ஆயிற்று.   
       

இனி தேய்த்து, துவைத்து,
மாலை சிறு சிற்றுண்டி, இரவு சிற்றுண்டி,
மறுபடி கால் வலிக்க, கண் சுழல இரவு படுத்த உடனே கண் மூடிவிடும்.
பெண்கள் தின சிறப்பு நாளும் முடிந்து விடும்.


சகோதரர்கள், கணவர் என்று ஒரு ஆணும் உங்களை வாழ்த்தவில்லை என்றால்,
ப்ராக்டிக்கல் வாழ்க்கை வாழ்கிறீர்கள், சோஷியல் மீடியா வாழ்க்கை அல்ல என்றுணர்ந்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

பெண்கள் தின வாழ்த்துக்கள்!         
   
#பெண்டிர்தினம் #Womensday 

No comments:

Post a Comment