சில காரணங்களால், என் மீது மிகுந்த கோபத்திலிருந்தாள் மகள். அவள் அழுகை, கோபம் என்று உணர்ச்சி வசப்பட்டதினால், என்னுடைய ஒரு schedule ரத்தானது.
I cancelled my plan, because of her emotional state. I was cool with it. So no regrets.
ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் அவள் சமாதானம் ஆன பாடில்லை. சில நிமிடங்களில் நான் அவளுக்கு கதை படிக்கும் நேரம் ஆனதால், அதற்கு அழைத்தேன். கோவமாக இருந்த அவள், ஓரிரு நொடிகளில், ஓவென அழுது என்னை கெட்டியாக கட்டிக்கொண்டு அழுதாள். "நா உன்னை உன் பிளான கான்செல் செய்ய வெச்சேன். ஆனா உடனே நீ எனக்கு கதை படிக்கட்டுமான்னு கேக்குறியே. எம்மேல கோவம் இல்லியா உனக்கு? என்னை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?" ன்னு ஒரே அழுகை. இந்த அழுகைய சமாதானம் செய்யப் போக, நானும் அழுததுதான் நடந்தது.
இது நடந்து சில நாட்கள் ஆனாலும், கிட்டத்தட்ட தினமும், ஏதோ ஒரு ஓரிகாமி செஞ்சி, அதுல "சாரி, ஐ லவ் யூ"ன்னு எழுதி தர்றா.
ஓவர் எமோஷன் ஒடம்புக்காகாது, மகளே. #மகளதிகாரம்