கைகளை கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு
கோபப்படுவதில்லை.
நீ வளர்கிறாய்.
நீ வளர்கிறாய்.
முடி வெட்ட அழகு நிலையம் செல்வதில்லை.
நீ வளர்கிறாய்.
என்னை இன்னொருவருடன் பேச விடுகிறாய்.
நீ வளர்கிறாய்.
கண்டித்தால் அழாமல் பதில் பேசுகிறாய்.
நீ வளர்கிறாய்.
உன் பொருட்களை பத்திரமாய் எடுத்து வைக்கிறாய்.
நீ வளர்கிறாய்.
எனக்கு முடியாதபோது ஓய்வு கொடுக்கிறாய்.
நீ வளர்கிறாய்.
பிறர் மனது நோகாதவாறு பேச முயற்சி செய்கிறாய்.
நீ வளர்கிறாய்.
ஆசை பட்டாலும் அடம் பிடிப்பதில்லை பெரும்பாலும்.
நீ வளர்கிறாய்.
புகைப்படத்திற்கு pose செய்ய நாட்டமில்லை. அந்த தருணத்தை 'வாழ' விரும்புகிறாய்.
இதை விடுத்து வளறாதே!
கோபப்பட்டாலும் நிமிடங்களில் தெளிவடைகிறாய்.
இதை விடுத்து வளறாதே!
அழுகையே இருந்தாலும் அழுது தீர்த்து தெளிந்து விடுகிறாய்.
இதை விடுத்து வளறாதே.
எல்லாரையும் நேசிக்கிறாய்.
இதை விடுத்து வளறாதே.
சிறு சிறு விடயத்திற்கும் அகம்/முகம் மலர மகிழ்கிறாய்.
இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடாதே!
மகிழ்ச்சியை சில சமயம் மற்றவரிடத்தில் தேடுகிறாய்.
கட்டாயம் இதை மட்டும் விடுத்து வளர்ந்து விடு!!