அதிகாலைப் பறவைகளின் ஒலி
ஆலயத்தின் தெய்வீக மணம்
இலைகள் உதிர்க்கும் மழைநீர்
ஈரம் மாறாத மண்
உன்னை முதன்முதலாய் சந்தித்த நாள்
ஊதுவத்தியின் நறுமணம்
எதிர்ப்பாராத மழை
ஏகாந்தத்தின் அமைதி
ஐயமற்ற அன்புடைய சுற்றம்
ஒழுக்கமான வாழ்க்கை
ஓவியமாய் பிறந்த குழந்தை
ஔடதமில்லா ஆரோக்கியம்
களங்கமில்லாத உன் காதல்
சலசலக்கும் ஆற்று நீர்
ஞாயிற்றுக் கிழமை
கடலலைகள்
தனிமையில் மெல்லிசை
நறுமணமிக்க மலர்கள்
பலிக்கும் சந்தோஷக் கனவுகள்
மழலையின் பொக்கைவாய் சிரிப்பு
யதார்த்தமான நட்பு
ரம்யமான தாலாட்டு
லட்சியங்கள் நிறைவேரும் தருணம்
வள்ளலை ஒத்த கருணை மனம்
வாழ்க்கை அழகானது!