March 26, 2012

நொறுக்க்ஸ் - Mar 26

நான் ஏழு மாசம் ப்ரெக்னன்ட்ஆக இருக்கும் போதுதான் என் niece அமெரிக்காவில் இருந்து வந்தாள். வயிற்றில் பாப்பா என்றவுடன் அவளுக்கு ஆச்சர்யமும் சந்தேகமும் ஒரு சேர வந்தன. “அத்தே, பாப்பா வயித்துக்குள்ளேயா  இருக்கு ?” என்றாள். நான் “ஆமாம், வெளியே வந்தவுடன் உன்னுடன் விளையாடும்” என்றேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் “பாப்பாவை எப்படி  அத்தே சாபிட்டே?... yakki” :)


########

என் குழந்தைக்கு ஏழு மாசம் ஆகும்போதுதான் என் niece முதல்முறையாக என் குழந்தையை பார்த்தாள். அவள் US இல் இருந்து போனில் பேசும்போது, “நீ சென்னை வரும்போது ஜானு உன்னுடன் விளையாடுவாள்” என்பேன். அவள் வந்தபோது, சதா படுத்துக்கொண்டே இருக்கும், சிரிக்கும், கை-கால் ஆட்டும் குழந்தையோடு  அவளுக்கு சிறிது நேரமே entertaining காக இருக்க, அவள்  “அத்தே, பாப்பாவை பாட்டிகிட்டே  கொடுத்துட்டு  வா, நாம ரெண்டுபேரும்  விளையாடலாம்”  சொன்னாள். அதை கேட்டு அனைவரும் சிரித்தோம்.